பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கைக்கு மேலும் இரு ஆண்டுகள் கால அவகாசம்!!

பொறுப்புக்கூறல் விடயத்தில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


பிரித்தானியா, கனடா, ஜேர்மன் உள்ளிட்ட ஐந்து நாடுகள் இணைந்து கொண்டுவரப்படவுள்ள பிரேரணையில், இலங்கைக்கு கால அவகாசம் வழங்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 40ஆவது அமர்வு தற்போது ஜெனீவாவில் நடைபெற்று வருகின்றது.

இதன்போது, பிரித்தானியா, கனடா, ஜேர்மனி, மசிடோனியா, மொன்ரனிக்கோ ஆகிய நாடுகள் இணைந்து எதிர்வரும் 20ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான புதிய தீர்மானத்தை சமர்ப்பிக்கவுள்ளன.

இதற்கான தீர்மானத்தின் முன்வரைவு ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்’ என்ற தலைப்பில், ஜெனிவாவில் உள்ள பேரவையின் உறுப்பு நாடுகள் மத்தியில் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, 2015ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, இலங்கை அரசாங்கத்துக்கு, மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்படவுள்ளது.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்கவுள்ள பேரவையின் 43 ஆவது கூட்டத்தொடரில், ஐ.நா. மனித உரிமை ஆணையாளரினால் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ள இந்த வரைவில், 2021 மார்ச் மாதம், விரிவான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறும் கேட்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 2015 இல் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து, ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் விரிவான அறிக்கையுடன், பேரவையில் விவாதம் ஒன்று நடத்தப்படும் என்றும் அந்த வரைவில் கூறப்பட்டுள்ளது.

ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகளைப் பாராட்டும் இந்த வரைவில், 30/1 தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கைக்கு மேலும் காலஅவகாசம் வழங்கப்படக்கூடாது என, தமிழர் தாயகப் பகுதிகளில் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.