பாகிஸ்தான் பிரஜைகளுக்கு விசா வழங்க இந்தியா மறுப்பு!

பாகிஸ்தானைச் சேர்ந்த சுமார் 500 பேருக்கு விசா வழங்க இந்தியா மறுத்துள்ளதாக பாகிஸ்தான் மத விவகார அமைச்சர் பீர் நூர் உல் ஹக் காத்ரி தெரிவித்துள்ளார்.

இதன்படி ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீர் தர்காவில் வழிபாடுகளை மேற்கொள்ள  வருகைதரும் பாகிஸ்தானை சேர்ந்த 500 பேருக்கே இவ்வாறு விசா வழங்க மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், “பாகிஸ்தானைச் சேர்ந்த 500 பேர் அஜ்மீர் தர்காவில் வழிபாடுகளை மேற்கொள்ள எதிர்வரும் வியாழக்கிழமை இந்தியா செல்ல திட்டமிட்டிருந்தனர். ஆனால், அவர்களுக்கு இந்திய தூதரகம் விசா வழங்க மறுத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக  500 பேருக்கும் தகவல் அனுப்பியுள்ளோம். இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் வருவதற்கு கடந்த ஓராண்டில் 5,600 சீக்கிய பக்தர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை  312 இந்து பக்தர்களுக்கும் விசா வழங்கியுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.