இந்தியாவுடன் சமாதான பேச்சுவார்த்தைக்கு தயார்: பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதுவர்!!

இந்தியாவுடன் சமாதான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க தயார் என பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதுவர் அசாத் மஜீட் கான் தெரிவித்துள்ளார்.

வொஷிங்டனில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் இதுகுறித்து தெரிவிக்கையில், “இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுவானதாக பேணுவதே எமது நோக்கம். கடந்த 26ஆம், 27ஆம் திகதிகளில் இடம்பெற்ற சம்பவங்கள் துரதிஷ்டவசமானவை.
அதேநேரம், இந்தியாவின் பொறுப்பற்ற தன்மையை உலக நாடுகள் உணர்ந்துகொள்ள வேண்டும். சமாதான பேச்சுவார்தைகளை முன்னெடுக்க வேண்டும். அவ்வாறு முன்னெடுப்பதால் பிராந்தியத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.
அந்தவகையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சமாதான பேச்சுவார்தைக்கு தயார் என தெரிவித்துள்ளார். எனவே இதற்கு அமெரிக்காவும் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும். பேச்சுவார்தையின் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு” என்று தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.