இந்தியாவுக்கு அமெரிக்க வழங்கிவந்த வர்த்தக சலுகை இரத்து!!

இந்தியாவுக்கு வழங்கி வரும் வர்த்தகத்துக்கான முன்னுரிமை அந்தஸ்தை இரத்துச் செய்ய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார்.

கடந்த 42 ஆண்டுகளாக வழங்கிவந்த வர்த்தக சலுகையே இவ்வாறு இரத்துச் செய்யப்படவுள்ளதாக  ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளார்.

அந்தவகையில், சுங்க வரிகள் எவையுமின்றி பல பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை நிறுத்துவதற்கு ட்ரம்ப் முடிவு செய்துள்ளார்.

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா மிக அதிகளவிலான வரியை விதிப்பதுடன் இந்திய சந்தைக்கான அமெரிக்காவின் நியாயமான அணுகுமுறைகளை உறுதிசெய்வதற்கு அந்நாட்டு அரசாங்கம் தவறிவிட்டதாகவும் அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் டரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா வழங்கிவரும் இந்தச் சலுகைப் பட்டியலிலிருந்து இந்தியாவை நீக்குவது தொடர்பான முடிவு குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்துக்கும் இந்திய அரசுக்கும் அறிவிக்கப்பட்டதன் பின்னர் அதற்கான உத்தரவில் ஜனாதிபதி ட்ரம்ப் கையெழுத்திடவுள்ளார்.

மேலும், இது நடைமுறைக்கு வருவதற்கு குறைந்தது 60 நாட்கள் ஆகும் எனவும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகளுக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கிடையே அரசியல் மற்றும் பாதுகாப்புத் துறையில் சுமுகமான உறவுகள் இருந்துவரும் நிலையில் வர்த்தக உறவு தொடர்ந்து மோசமடைந்து வருகின்றது.

கடந்த 2017 ஆம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதன் பின்னர் இந்தியா மீது மேற்கொண்ட பாரிய நடவடிக்கையாக இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.