அமிதாப், ரன்பீர், ஆலியா இணையும் `பிரம்மாஸ்த்ரா...’ 150

அமிதாப், ரன்பீர், ஆலியா, நாகார்ஜுனா எனப் பல நட்சத்திரங்கள் இணையும் இந்தி திரைப்படமான `பிரம்மாஸ்த்ரா’ டைட்டில் லோகோ நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.
இதில் என்ன பெரிதாக இருக்கிறது என்று கேட்கிறீர்களா... இந்த லோகோவை நேற்று கும்பமேளா விழாவில் மகாசிவராத்திரி நாளில் 150 ட்ரோன்கள் மற்றும் அதில் பொருத்தப்பட்ட விளக்குகள் உதவியுடன் வானத்தில் பிரமாண்டமான முறையில் இது வெளியிடப்பட்டது.

உத்தரப்பிரதேஷத்தில் இருக்கும் ப்ரயாக்ராஜ் (பெயர் மாற்றப்பட்ட அலகாபாத்) நகரத்தில் லட்சக்கணக்கில் மக்கள் திரளும் கும்பமேளா விழாவின்போது ஒளியும் ஒலியும் நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம். அதன் ஒரு பகுதியாக இம்முறை கண்கவர் நிகழ்ச்சியாக 150 ட்ரோன்கள் மூலம் வானத்தில் இந்திய தேசியக்கொடி தொடங்கி, பல வடிவங்கள் அமைத்துக் காட்டப்பட்டது. இந்தப் படத்தின் லோகோவும் இதே முறையில் பிரமாண்டமாக அத்தனை மக்கள் முன்னணியிலும் வெளியிடப்பட்டது. இந்தப் படத்தில் நடிக்கும் ரன்பீர் கபூர், அலியா பட் மற்றும் இயக்குநர் அயன் முகேர்ஜி ஆகியோர் இதை நேரில் கண்டுகளித்தனர். பெரும் பொருட்செலவில் எடுக்கப்படும் இந்தப் படத்தை கரண் ஜோகர் தயாரிக்கிறார். இன்றைய நாளில் நடக்கும் கதைதான் என்றாலும், பீரியட் படத்துக்கான அம்சங்களும் இதில் இருக்கும் என இதன் இயக்குநர் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். ஏற்கெனவே, பாலிவுட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் பாலிவுட் பாகுபலியான இந்தப் படம் மூன்று பாகங்களாக வெளிவருமாம். இதன் முதல் பாகம் இந்த வருடம் டிசம்பர் 25-ம் தேதி வெளிவருகிறது. நேற்று நடந்த இந்தப் பிரமாண்ட லோகோ வெளியீட்டின் வீடியோ ஒன்றைப் படக்குழுவினர் இன்று வெளியிட அது தற்போது வைரல் ஹிட்டானது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.