நொடிக்கு 40 Gb வேகம்... வருகிறது USB4!

USB செயல்படுத்துபவர்களின் கூட்டமைப்பு மற்றும் இன்டெல், நேற்று USB-யின் அடுத்த வெர்ஷனான USB4-ஐ அறிவித்தது.
இதன் வேகம் முந்தைய USB 3.2-ஐ விட இரண்டு மடங்கு அதிகமாம். நொடிக்கு 40 Gb வேகத்தில், இதில் டேட்டா ட்ரான்ஸ்ஃபர் நடக்குமாம். இதைவைத்து 60Hz ஃபிரேம் ரேட்டில் இரண்டு 4K டிஸ்ப்ளேகளுக்கு ஒரே நேரத்தில் தகவல் அனுப்ப முடியும்.

இன்னும் முழு விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை என்றபோதிலும், இவற்றின் வசதிகள் ஆப்பிளின் தண்டர்போல்ட் 3 இருந்ததைப் போலவேதான் இருக்குமெனத் தெரிகிறது. ஒரே வித்தியாசம், இது ஓப்பன்சோர்ஸாக வெளிவரும். அதாவது, இதைப் பயன்படுத்துபவர்கள், இதற்காக எந்த ராயல்டியும் கட்டவேண்டியதில்லை. மேலும் USB 3.2 மற்றும் USB 2.0 போன்ற பழைய வெர்ஷன்களிலும் இந்த USB4-ன் சப்போர்ட் இருக்கும்.

USB-யின் இன்னொரு முக்கிய அம்சம், பவர் டெலிவரி. இந்த USB4 100W வரை பவர் கொடுக்குமாம். இப்போது, 50 நிறுவனங்கள் USB4 சான்றிதழுக்காகப் பதிவுசெய்துள்ளார். ஆனால், 2017ல் வெளியான USB 3.2-வே இன்னும் பெரிய அளவில் மக்களைச் சென்றுசேரவில்லை. எனவே, இது மக்களிடம் பரவ, இன்னும் சில வருடங்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.