எழுவர் விடுதலையை வென்றெடுக்க வேண்டியது நமது கடமை' - அற்புதம்மாள் போராட்டத்துக்கு சத்யராஜ் ஆதரவு!!
`பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலைக் குறித்து தமிழக ஆளுநர் முடிவெடுக்கலாம்' என்று நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்து ஆறு மாதம் முடியப்போகிறது.
ஆனால், இன்னும் அவர்கள் விடுதலை செய்யப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றனர். சட்டப்பேரவை தீர்மானம், அமைச்சரவை முடிவு, அனைத்துக் கட்சிகளின் குரல், தமிழக மக்களின் குரல் என எதையும் கண்டுகொள்ளாமல் விடுதலை இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.
ஏழு பேரின் விடுதலைக்காகப் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் தொடர்ந்து போராடிவருகிறார். ஆளுநர் கையொப்பமிட வலியுறுத்தி தமிழ்நாடெங்கும் சென்று மக்கள் சந்திப்பு நிகழ்வை அற்புதம்மாள் நிகழ்த்தி வருகிறார். வரும் மார்ச் 9-ம் தேதி விடுதலையை வலியுறுத்தி மனிதச்சங்கிலி போராட்டம் நடத்துகிறார். இதற்கிடையே, இந்த மனிதச்சங்கிலி போராட்டத்துக்கு திரை நட்சத்திரங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நடிகர் சத்யராஜ் ஆதரவு தெரிவித்து வெளியிட்டுள்ள வீடியோவில், ``28 ஆண்டுகளாக ஏழு பேரும் சிறையில் வாடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களது விடுதலையை வென்றெடுக்க வேண்டியது நம் கடமை. விடுதலை வலியுறுத்தி நாளை மறுநாள் தமிழகம் முழுவதும் மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற இருக்கிறது. இதில் நானும் கலந்துகொள்ள இருக்கிறேன். மக்களும் திரளாக கலந்துகொண்டு எழுவர் விடுதலைக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை