`நீதியை உறுதி செய்ய வேண்டும்' - அற்புதம்மாள் போராட்டத்துக்கு இயக்குநர் ராஜூமுருகன் ஆதரவு!
எழுவர் விடுதலையை வலியுறுத்தி அற்புதம்மாள் நடத்தும் மனிதச்சங்கிலிக்கு `குக்கூ' பட இயக்குநர் ராஜூமுருகன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் முடிவெடுக்கலாம்' என்று நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்து ஆறு மாதம் முடியப்போகிறது. ஆனால், இன்னும் அவர்கள் விடுதலை செய்யப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றனர். சட்டப்பேரவை தீர்மானம், அமைச்சரவை முடிவு, அனைத்துக் கட்சிகளின் குரல், தமிழக மக்களின் குரல் என எதையும் கண்டுகொள்ளாமல் விடுதலை இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. ஏழு பேரின் விடுதலைக்காகப் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் தொடர்ந்து போராடிவருகிறார். ஆளுநர் கையொப்பமிட வலியுறுத்தி தமிழ்நாடெங்கும் சென்று மக்கள் சந்திப்பு நிகழ்வை அற்புதம்மாள் நிகழ்த்தி வருகிறார். வரும் மார்ச் 9-ம் தேதி விடுதலையை வலியுறுத்தி மனிதச்சங்கிலி போராட்டம் நடத்துகிறார். இதற்கிடையே, இந்த மனிதச்சங்கிலி போராட்டத்துக்கு திரை நட்சத்திரங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
குக்கூ' பட இயக்குநர் ராஜூமுருகன் ஆதரவு தெரிவித்து வெளியிட்டுள்ள வீடியோவில், ``ஆளுநர் கையெழுத்துக்காக போராட வேண்டியது நமது கடமை. இது இந்திய இறையாண்மையை, இந்திய சட்டத்தைக் காப்பாற்றுவதற்கான போராட்டமாகத்தான் பார்க்கிறேன். உச்ச நீதிமன்றம் எழுவரின் தண்டனையை உறுதி செய்தபோது அதற்கு ஆமோதித்து நாம் பேசினோமோ அதே உச்ச நீதிமன்றம் இப்போது விடுதலையை உறுதி செய்து தீர்ப்பளித்திருக்கிறது. அதற்கு ஆதரவாக நடக்கக்கூடிய போராட்டம் இது. 28 ஆண்டுகளாகச் செய்யாத குற்றத்துக்காகச் சிறைவாசம் அனுபவித்து வருகிறார்கள். அவர்களுக்கு ஒளி கொடுக்கும் வகையில் விடுதலைக்கான தீர்ப்பு வந்துள்ளது. இதை தாமப்படுத்தும் ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நடக்கும் இந்த மனிதச் சங்கிலி போராட்டத்தில் நான் பங்கேற்கிறேன். நீங்களும் இணைய வேண்டும்" என மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை