நாளை முதல் பெண்களுக்கு இலங்கையில் ஏற்படவுள்ள மாற்றம்!
இலங்கையில் பெண்களுக்கு மாத்திரம் ரயிலில் பெட்டியை ஒதுக்கும் நடைமுறை அமுலுக்கு வரவுள்ளது.
இந்த நடைமுறை மகளிர் தினத்தை முன்னிட்டு நாளை முதல் அமுலுக்கு வரவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாளை காலை 6.59 மணிக்கு வேயங்கொட ரயில் நிலையத்தில் இருந்து முதலாவது ரயில் பயணம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே அதிகாரி டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவின் தலைமையில் இந்த சேவை ஆரம்பித்து வைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் பல வருடங்களுக்கு முன்னர் பெண்களுக்காக தனியான ரயில் பெட்டி முறை அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் உரிய முறையில் அது முன்னெடுக்கப்படவில்லை.
ரயில்களில் பெண்கள் முகம் கொடுக்கும் சிரமம் மற்றும் பாலியல் துன்புறுத்தல்களை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அதற்கமைய, அலுவலக ரயில்களான பங்கதெரிய, சாகரிக்கா, சமுத்ராதேவி, ரம்புக்கன்ன, மஹவ ஆகிய ரயில்களில் மூன்றாவது பிரிவின் ஒரு பெட்டி இவ்வாறு ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட ரயில் பெட்டியில் ஆண்கள் ஏறுவதனை தவிர்ப்பதற்காகவும் இந்த சேவையை தொடர்ந்து உரிய முறையில் பாதுகாப்பதற்காகவும் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் கடமைக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை