மட்டக்களப்பில் தொடரும் மனித எச்சங்களின் மீட்பு!!
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள சத்துருக்கொண்டான், சவுக்கடி கடற்கரை பகுதியிலிருந்து மேலும் சில மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக மட்டு. தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த புதன்கிழமை கிணறு புனரமைப்பதற்காக குழி தோண்டும்போது குறித்த இடத்திலிருந்து மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை) மாலை சம்பவ இடத்திற்கு விரைந்த மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சீ.றிஸ்வான் முன்னிலையில் விசாரனைகள் இடம்பெற்றன.
அதனைத் தொடர்ந்து நீதவானின் உத்தரவிற்கு அமைவாக குறித்த இடம் தொடர்ந்தும் அகழப்பட்டபோதே மனித மண்டை ஓட்டின் பகுதிகளும், எலும்புகளும் மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன் அகழ்வுப் பணிகளும் நிறைவுக்கு வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த விடயம் தொடர்பாக மட்டக்களப்பு குற்றத்தடயவியல் பிரிவு பொறுப்பதிகாரி ரவிச்சந்திரன் தலைமையில் விசாரனைகள் இடம்பெற்றன.
அத்துடன், நீதிபதியின் உத்தரவிற்கமைய மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி சத்துர நந்தசிறி எச்சங்களை பகுப்பாய்வு செய்வதற்காக கொண்டுசென்றுள்ளார்.
இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

.jpeg
)





கருத்துகள் இல்லை