ஒரே ஆண்டில் 4,800 பொதுமக்கள் உயிரிழப்பு – ஐ.நா அறிக்கையில் தகவல்!

ஏமனில் நடைபெற்றுவரும் உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த ஆண்டில் மாத்திரம் 4,800 பேர் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.


ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “உலக அகதிகள் அமைப்பின் சார்பில் தரவு ஒன்று வெளியிடப்பட்டது.

அதில் கடந்த 2018 -ம் ஆண்டில் ஏமனில் நடக்கும் உள் நாட்டுப் போர் காரணமாக 4,800 பொது மக்கள் இறந்திருக்கிறார்கள். ஒவ்வொரு வாரமும் பொதுமக்களில் 100 பேர் உயிரிழந்திருக்கின்றன அல்லது காயமடைந்திருக்கின்றனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏமனில் நடந்து வரும் உள்நாட்டு போரை நிறுத்த ஐக்கிய நாடுகள் சபை நீண்ட காலமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில் பல்வேறு பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு அரசும், ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கடந்த மாதம் மீண்டும் ஒப்பு கொண்டனர்.

தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த ஜனாதிபதி மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.

இதில் ஜனாதிபதி மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானோ கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது.

ஏமன் அரசுடன் இணைந்து சவுதி நடத்தும் மனிதாபிமானமற்ற தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் வெளியிட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.