மின்சாரம் தாக்கியதில் மேசன் தொழிலாளி உயிரிழப்பு!

காத்தான்குடி பகுதியில் கட்டட நிர்மாண வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது, மின்சாரம் தாக்கியதில் மேசன் தொழிலாளி ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.


புதிய காத்தான்குடி பதுரியா பகுதியில் நேற்று (சனிக்கிழமை) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் புதிய காத்தான்குடி-02, மீன்பிடி இலாகா வீதியை அண்மித்து வசிக்கும் ஒரு பிள்ளையின் தந்தையான முஹம்மது அனீஸ் (வயது 29) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அக்கரைப்பற்றைச் சேர்ந்த இவர் காத்தான்குடியில் திருமணம் முடித்து, அங்கு தொழில் புரிந்து வந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் குறித்து காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.