மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட 7 பேர் கைது!

பொகவந்தலாவ பெற்றேசோ தோட்ட பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஏழுபேர் பொகவந்தலாவ பொலிஸாரினால் கைது செய்யபட்டுள்ளனர்.
இன்று (10) குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


பொகவந்தலாவ பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மாணிக்கல் அகழ்விற்கு பயன்படுத்த உபகரனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யபட்டவர்களில் ஒரு சந்தேக நபர் பொகவந்தலாவ பெற்றேசோ தோட்ட பகுதியை சேர்ந்தவர் எனவும் ஏனைய ஆறு பேரும் பலாங்கொட பகுதியை சேர்ந்தவர் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யபட்ட சந்தேக நபர்கள (10) ஹட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலை படுத்துவதற்கான நடவடிக்கையினை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.