இலகு ரயில் சேவைக்கு யப்பான் நிதி உதவி!!

கொழும்பு மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளில் நிலவும் கடும் வாகன நெருக் கடியை கட்டுப்படுத்துவதற்காக கொழும்பு நகரத்துக்குள் இலகு ரயில் கட்டமைப்பொன்றை அமைப்பதற்காக ஜப்பான் சர்வ தேசபுரிந்தணர்வு நிறுவனம் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியை வழங்குவதற்கு உடன்பட்டுள்ளது.

அந்தவகையில் 1.5 பில்லியன் செலவில் ஆரம்பமாகவுள்ள குறித்த திட்டத்திற்கு முதற்கட்டமாக 270 மில்லியன் டொலரை வழங்க ஜப்பான் முன்வந்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் கொழும்பு கோட்டையிலிருந்து மாலபே வரை நிர்மாணிக்கப்படவுள்ள புகையிரத வீதி கட்டமைப்பில் 16 ரயில் நிலையங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன.

நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர இக்கடன் உதவியைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் கிடைத்தது.

2024ம் ஆண்டளவில் 6 கட்டங்களின் கீழ் இக்கடன் உதவி பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. இதன் முதற்கட்டத்தின் கீழ் 260 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை ஜப்பான் வழங்கியுள்ளது.

இது, 0.1 சத வீத குறைந்த வட்டி விகிதத்தில் இக்கடன் உதவியை பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.