`இது கொடூரத்தின் உச்சம்; தண்டனையை உடனே வழங்க வேண்டும்!’ - சத்யராஜ் ஆவேசம்

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமைகளுக்கு காரணமான நான்கு பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டி தமிழகம் முழுவதும் குரல்கள் வலுத்து வருகின்றன. இந்தச் சம்பவம் குறித்து நடிகர் சத்யராஜ் சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

``பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை அக்கிரமத்தின் உச்சம், அநியாயத்தின் உச்சம், கொடூரத்தின் உச்சம். இந்த மனித மிருகங்களுக்கு சட்டப்படி உச்சபட்ச தண்டனைகள் தாமதமில்லாமல் வழங்க வேண்டும். அவங்களுக்கு எப்படி இப்படி மனசு வந்தது என்று தெரியவில்லை. மனநலம் தொடர்பான பாடத்திட்டம் பள்ளியிலிருந்தே இருக்க வேண்டுமென்பது எனது வேண்டுகோள். தண்டனைகள் மூலமாக இந்த மிருகங்களைத் தண்டிக்கத்தான் முடியும்; திருத்த முடியாது. இந்த மாதிரி மனப்பிறழ்வுகளுக்கு ஆளானவங்களுக்கு சைக்கலாஜிக்கல் மருத்துவம் தேவைப்படுகிறது. அதை நோக்கியும் கவனம் செலுத்த வேண்டும். உடனடி தண்டனை வழங்க வேண்டும் என்பதை மன வலியோடு கூறிக்கொள்கிறேன்’’ என்றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

No comments

Powered by Blogger.