முடியை மாற்ற நினைத்து உயிரைவிட்ட தொழிலதிபர்!!

மும்பை வடகிழக்குப் பகுதியில் உள்ள பவாய் பகுதியைச் சேர்ந்தவர் சௌத்ரி.
தொழிலதிபரான இவருக்கு வயது 50. மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர். இவருக்கு தலைமுடிகள் கொட்டியதால் சிகிச்சை பெற முடிவு செய்து, மும்பை `சிஞ்ச்பொக்லி' யில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையை நாடியுள்ளார். அங்கு சௌத்ரியைப் பரிசோதித்த டாக்டர்கள், முடி மாற்று அறுவை சிகிச்சை செய்ய ஐந்து லட்சம் வரை செலவாகும் என்று கூறியுள்ளனர்.

இதையடுத்து, சௌத்ரி தனது கார் டிரைவருடன் மருத்துவமனை சென்றார். மருத்துவர்கள் அறுவை சிகிச்சை  மூலம் நவீனமுறையில் முடி மாற்று சிகிச்சை அளிக்க முடிவு செய்து, மயக்க மருந்து செலுத்தினர். பல மணி நேரம் இந்த சிகிச்சை நடந்தது.  பின்னர் வீடு திருப்பிய நிலையில் அவருக்கு  திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, பவாய் ஹிரானந்தனி மருத்துவமனைக்குச் சென்றார். அப்போது அவருக்கு சுவாசப் பிரச்னை இருந்தது. மருத்துவர்கள் அவரைப் பரிசோதனை செய்தபோது அலர்ஜி இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவருக்குச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. உடனே டாக்டர்கள் அவரைக் காப்பாற்றப் போராடியும் பலனில்லாமல் சிறிதுநேரத்தில் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதைக் கேள்விப்பட்டதும் அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் அதிர்ச்சியடைந்தனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 'முடிமாற்று அறுவை சிகிச்சையால் சௌத்ரி இறந்ததாகக் கூறுவது அதிர்ச்சியளிக்கிறது' என்று சரும மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

`சிகிச்சையின்போது வலி நிவாரணிகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் தரப்படும். அப்போது வெறும் வயிற்றில் மாத்திரை சாப்பிட்டிருந்தால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ வாய்ப்பு உண்டு' என்று  முடிமாற்று அறுவை சிகிச்சை அசோசியேஷனைச் சேர்ந்த டாக்டர் அனில் கார்க் கூறியுள்ளார்.

`மருத்துவர்கள் அளித்த  தவறான சிகிச்சைதான் அவரது இறப்புக்குக் காரணம். இவ்வளவு குறைந்த வயதில் அவர் இறந்திருப்பது அதிர்ச்சியாக உள்ளது'' என்று சௌத்ரியின் உறவினரான திரிலோக் குமார் கூறியுள்ளார்.

``சிகிச்சைக்குமுன் பல்வேறு உடல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தகுதிவாய்ந்த மருத்துவர்கள்தான் இந்த அறுவை சிகிச்சையைச்  செய்தனர்'' என்று அந்த  மருத்துவமனையின் நிர்வாக அதிகாரி கூறியுள்ள நிலையில், இந்த இறப்பு தொடர்பாக  வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.