காணாமல்போன விவசாயி சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு - வெல்லாவெளி - ராணமடு மலையர்கட்டு வயல் பிரதேசத்தில் கைகள் கட்டப்பட்ட நிலையில் சந்தேகத்திற்கடமான முறையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பொலிஸார் இருவரைக் கைதுசெய்துள்ளனர்.


சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வயல்நிலத்திற்குச் சென்ற விவசாயி ஒருவர் நேற்று முன்தினம் மாலை 5 மணியிலிருந்து  காணாமல் போயுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவிலுள்ள  ராணமடு மாலையர்கட்டு கிராமங்களை இணைக்கும் 16 ஆம் கிராமம் அணைக்கட்டுப் பாதையில் வைத்தே 64 வயதுடைய கணபதிப்பிள்ளை திருநாவுக்கரசு எனும் 11 ஆம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி ஒருவர் கடந்த (10.03.2019) ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் காணாமல் போயுள்ளார்.
இவர் தனது வயல் நிலத்திற்குச் சென்று திரும்பி வரும் வழியிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது. நேற்று திங்கட்கிழமை காலை வரை வீடு திரும்பாத நிலையில் வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில்  உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனடிப்படையில் குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போது அங்கிருந்த அணைக்கட்டுப் பகுதியை அண்டிய காட்டுப் பகுதியிலிருந்து மோட்டார் சைக்கிள், கெல்மட் மற்றும் பாதணிகள் கண்டெடுக்கப்பட்டு அவை குறித்த நபருடையதென உறவினர்களால் உறுதிப்படுத்தப்பட்டது.
குறித்த நபருக்கு வயல் காணி தொடர்பான ஒரு தகராறு ஒரு குடும்பத்துடன்  இருந்ததாகவும் குறித்த குடும்ப நபர்கள்  காணாமல் போயுள்ளவரை தாக்க முயன்றதாகவும் உறவினர்கள் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர்கள் மூவரில் இருவர் வெல்லாவெளி பொலிஸாரினாலும் ஒருவர் மத்தியமுகாம் பொலிஸாரினாலும் கைதுசெய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் பின்னர் விசாரணைகளைத் துரிதப்படுத்திய வெல்லாவெளி பொலிஸார் நேற்று மாலை 5 மணி முதல் 6.15 மணி வரை மோப்ப நாயின் உதவியுடன் குறித்த காட்டுப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட போதும் எதுவித தடயங்களும்  கிடைக்கவில்லை.
காணமல்போனவரின் உறவினர்கள் கண்டுபிடித்துத் தருமாறு கதறி அழுததுடன் பொதுமக்களும் அவ்விடத்தை விட்டுச் செல்ல மறுத்தனர்.
இதன்போது தாம் தொடர்ந்தும் தேடுதலில் ஈடுபடுவதாகவும், சந்தேக நபர்களிடம் துரித விசாரணைகளை மேற்கொண்டு உரிய பதில் தருவதாகவும் வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நேற்றையதினம் உறுதியளித்ததையடுத்து பொதுமக்களும் உறவினர்களும் அவ்விடத்தை விட்டு கலைந்து சென்றுள்ளனர்.
இந்நிலையில், காணாமல் போன மட்டக்களப்பைச் சேர்ந்த 62 வயதுடைய விவசாயி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட பிரச்சினை காரணமாக குறித்த நபர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகைளை  வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.