ஊடகவியலாளரின் வீட்டில் பொருட்கள் திருட்டு!!

முல்லைத்தீவு கரைச்சி குடியிருப்பில் அமைந்துள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டை உடைத்து, கமரா மற்றும் மடிக்கணிணி என்பன திருடப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட ஊடக அமையத்தின் உறுப்பினரும் ஊடக படப்பிடிப்பாளரும் செய்தியாளருமான கே.குமணன் என்பவரின் வீட்டிலேயே இந்த சம்பவம் நேற்று (செவ்வாய்க்கிழமை)  பகல் இடம்பெற்றுள்ளது.
ஊடகவியலாளரின் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டிலிருந்த பெறுமதியான இரண்டு கமராக்கள் மற்றும் மடிக்கணிணி என்பன திருடப்பட்டுள்ளன.
இந்த திருட்டுச் சம்பவம் குறித்து, முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளமையைத் தொடர்ந்து, பொலிஸார் புலன் விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.