என்னைக் கட்டி அணைத்தார் அஜித்!!

"நேர்கொண்ட பார்வை" படப்பிடிப்பின் போது தன்னை அஜித் கட்டி அணைத்தார்: அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்தது என பலம்பெரும் நடிகர் டில்லி கணேஷ் கூறியுள்ளார்.
நடிகர் அஜித்குமார் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில " நேர்கொண்ட பார்வை" திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். மேலும்  இந்த திரைப்படத்தில் வித்யா பாலன், ஷ்ரதா ஸ்ரீநாத்,  ஆண்ட்ரியா , டில்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் டில்லி கணேஷ்:  படப்பிடிப்பிற்காக  தயாராகி தல அஜித் முன் சென்று நின்றேன், அப்பொழுது அவர் என்னை கட்டி தழுவினார்,  இந்த நிகழ்வு தனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் , பெருமிதத்தையும் கொடுத்ததாக  கூறியுள்ளார். 

No comments

Powered by Blogger.