தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் அறிவிக்கத் தடையில்லை!

தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் அறிவிக்க தேர்தல் ஆணையம் எந்த தடையும் விதிக்கவில்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைசெயலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், " தேர்தல் நடைமுறைகள் அமலில் உள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் 57 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அரசியல் கட்சிகளின் 2,653 சுவர் ஓவியங்கள், 5,337 போஸ்டர்கள் 1,561 பேனர்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழாவிற்கு எத்தனை பேர் வருவார்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுமா என்பது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியை, அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தியுள்ளதாக குறிப்பிட்ட அவர், 3 தொகுதி தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றால் அது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குற்ற பின்னனி உடையவராக இருந்தால், அவர்கள் செய்த குற்றத்தை செய்தித்தாள்களில் விளம்பரமாக வெளியிட வேண்டும் என தெரிவித்த அவர், தேர்தல் அறிக்கையில் அரசியல் கட்சிகள் எந்த திட்டத்தை வேண்டுமானாலும் அறிவிக்கலாம் என்றும், இலவசங்கள் அறிவிக்க தேர்தல் ஆணையம் எந்த தடையும் விதிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.