மரணம்_வருவதற்கு_முன்...

என்றோ ஒரு நாள் நாமெல்லாம்
இறக்கத்தான் போகிறோம்...
அதற்கிடையில் கொஞ்சமாவது
வாழுங்கள் மனிதர்களே...!


எவ்வளவு காலம்தான் இந்த
உலகத்தைக் குறை கூறப்போகிறீர்கள்..
நெருங்கி வாருங்கள் முட்களை மட்டுமே பார்த்த கண்கள் பூக்களையும் தரிசிக்கட்டும்..

உங்கள் செல்லரித்த இதயத்தைப்
புல்லரிக்க வைக்கலாம்...

மூடநம்பிக்கைகளை மூளை என்னும் மூடியால் மூடி வையுங்கள்...
சாதிகளை வேலிக்கு வெளியே வீசி விட்டு சமத்துவத்தை வீட்டுச் சுவரில் மாட்டி வையுங்கள்...

கதவுகளுக்குத் தாழ்ப்பாள் போடாமல் திறந்தே வையுங்கள்... தட்டாமல் திறக்கும் கதவுகளுத்தான் ஆயுள் அதிகம்...

குழந்தைகளைப் போல் மனங்களைத் திறந்து வையுங்கள் குறும்பு செய்யுங்கள்...

உங்களை வெறுப்பவரை நீங்கள் வெறுக்காதீர்கள் விலகிச் செல்லுங்கள்
ஒன்று நினைவிருக்கட்டும் உங்களுக்குப் பிடிக்காத அந்த ஒருவர் யாரோ ஒருவருக்கு உயிராக இருப்பார்...

கண்கள் எப்போதும் ஈரமாகவே இருக்கட்டும் ஆனந்தக் கண்ணீர் பல அசுத்தங்களைக் கழுவும் பன்னீர்...

ஏதோ ஒரு கால கட்டத்தில் அதிகமாக அன்பு வைத்தவர் உங்களைப் பிரிய நேரிடலாம்.... கலங்காதீர்கள் இந்த உலகம் அந்த ஒருவரை மட்டும் கொண்டிருக்கவில்லை...

நாடித்துடிப்பாய்க் கேட்டுக்கொண்டே இருக்கட்டும் உங்கள் சிரிப்போசை
த. யசுதன்
 #Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“


No comments

Powered by Blogger.