ஹரிஷ் கல்யாணின் சண்டாளி வீடியோ சாங்!

ஹரிஷ் கல்யாணின் நடிப்பில் திரைக்கு வர உள்ள   இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்  படத்திற்கான வீடியோ சாங் வெளியாகியுள்ளது.  இயற்கை பின்னனி காட்சிகளுடன் காதல் பிரிவிற்கான  பாடலாக அமைந்துள்ள இந்த பாடல் இணையதளத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ஹரிஷ் கல்யாண்  தனது இரண்டாவது படமான‌  இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ளார். மேலும் ஷில்பா மஞ்சுநாத் இந்த திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாணோடு ஜோடியாக நடித்துள்ளார்.  ஜீரோ படத்தை தயாரித்த மாதவ் மீடியா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்த படத்தையும் தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் மார்ச் 15ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

No comments

Powered by Blogger.