தமிழரசன் திரைப்படத்தில் இணைந்த‌ பிரபலம் யார்?

சரத்குமாருடன் 'சமஸ்தானம்' உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களில் நடித்தவர் மலையாள நடிகர் சுரேஷ் கோபி. இவர் விக்ரம் நாயகனாக நடித்த  'ஐ' படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  பின்னர் தீவிர அரசியலுக்கு சென்ற இவர் தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
சுரேஷ் கோபி , விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் படமான‌ 'தமிழரசன்' படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்திற்கு   இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். மேலும்  இந்த படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்குகிறார். 'தமிழரசன்  படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

No comments

Powered by Blogger.