தோலுரிக்கப்பட்ட கிளிகள்..!!

அறுக்கப்பட்ட கிளியின்
சிறகுகள் கதறி விழுந்தன
"அண்ணா அடிக்காதீங்க
அடிக்காதீங்க 'என

விச அரவமாகி உயிர்த்து உருசித்தது
அவர்களின் காம வெலிற்

குரல் வளை உடைக்கப்பட்ட
கிளி துடித்துப் போய்
"நண்பனென நம்பினேனே'
என அனுங்கியது

அனுங்கல் களும்
சிணுங்கல்களும் வேடிக்கைச் சாமானாகியது
கயவர்களின் மிருகப் பசியில்

ஈறை உணர்ந்த கிளி
மீள மீளக் கதறியது

மன நோய்ப் போதையில்
கயவர் கண்கள் சிவந்தன
இருதயம் கறுத்தன

முடிவில் கிளியின் தோலும் உரிக்கப்பட்டது
கிளியின் மார்புகளில் கண்ணீர் சுரந்தன
கிளியின் கண்களில் நெருப்பு எரிந்தன

ஆனாலும் கிளியால் பறக்க முடியவில்லை

இனியும் பறக்க முடியுமா தெரியவில்லை

ஓ. எங்கோ ஒலிக்கிறது பூலான் தேவியின் குரல்!

No comments

Powered by Blogger.