போலிகளை ஒதுக்கு!பொய்யும் பிரட்டும் நமக்கு எதற்கு!!

மாவீரர்களின் பெயர்களை சொல்லி சொல்லி, வீரவசனம் பேசி பேசி வாக்கு பொறுக்கி விட்டு ரணிலுக்கு ஆதரவாக வரவு_செலவு திட்டத்திற்கு கையுயர்த்தி வரும் #சிறிதரனை விட, நேற்றைய வரவு_செலவு திட்டத்திற்கு கையுயர்த்தாத #சரவணபவன், சிவசக்தி #ஆனந்தன், #சிறீநேசன், செல்வம் #அடைக்கலநாதன் போன்றோரை உண்மையாக வாழ்த்தலாம்.

பரம்பரையிலையே மாவீரர் இல்லாத சிறிதரன் போன்றோருக்கு எந்த தகுதியும் இல்லை அவர்கள் பற்றி பேசுவதற்கே.

 மாவீரர்களை கொடுத்த குடும்பங்களை கூட கெளரவிப்பதற்கும் எந்த தகுதியும் இல்லை.

சிங்களவர்களுக்கு வால் பிடிக்கும் எவரையும் மாவீரர்கள் ஏற்றுக்கொண்டதில்லை. வெறுமனே பொய் பித்தலாட்ட அறிக்கைகளை செய்திகளுக்காக வெளியிட்டு விட்டு சிங்களவர்களின் காலடியில் கிடக்கும் இவர்களை உண்மையாக மாவீரர்களை நேசிப்போர், உறவுகள் , அவர்களின் குடும்பங்கள் இவர்கள் போன்ற போலி மனிதர்களை விலத்தி வைப்பது இந்த நாட்டுக்காக தன்னை அர்ப்பணித்த மாவீரர்களுக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாகும்.

இனத்தை அழித்தவனுடன் சேர்ந்து மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதை விட சும்மா இருப்பது அவர்களுக்கு நாம் செய்யும் கெளரவமாகும்.

No comments

Powered by Blogger.