இன அழிப்பின் நீதிக்கான போராட்டத்தில் நீதியுடனும் நேர்மையுடனும் உணர்வோடும் எழுச்சி கொள்வோம்!!

இந்த மண்ணிலே வாழுகின்ற ஒவ்வொரு தமிழனின் உதிரத்திலும் கண்ணீரிலும் தமிழ்த்தேசத்தில் சிறிலங்கா அரசாங்கத்தினால் திட்டமிட்டடு நாடத்தப்பட்ட இன அழிப்பின் நினைவுகள் மறக்கவும் முடியாமல் மன்னிக்கவும் முடியாமல் கலந்துள்ளது. அந்த வகையில்

இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கப்பட கூடாது மற்றும் சிறீலங்காவை ஐநா பாதுகாப்புச் சபையின் ஊடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைத்தல் அல்லது சர்வதேச விசேட குற்றவியல் தீர்ப்பாயத்தை நிறுவி அதன் மூலம் விசாரணைகளை மேற்கொள்வதே சிங்கள தேசத்தின் திட்டமிட்ட தமிழின அழிப்பிற்கு நீதியைத் பெற்றுத் தரும் என்ற ஒரே கோசத்துடன் யாழ்.பல்கலைக்கழக சமூகத்தினால் தமிழின அழிப்பிற்கு நீதி கோரி எதிர்வரும் சனிக்கிழமை முன்னெடுக்கப்படும் மக்கள் எழுச்சிப் பேரணிக்கு வலுச்சேர்க்கும் வகையில் அதில் எழுச்சியுடன் பங்குபற்ற வேண்டிய கடமைப்பாடு இத் தமிழ்த் தேசத்தில் வாழுகின்ற அத்தனை உணர்வாளர்களுக்கும் உள்ளது.

ஆனால் அதே நேரம் தெருக்களில் நின்று உரிமைக்காகவும் காணாமல் போன உறவுகளுக்காகவும் போராடிக்கொண்டிருக்கும் எமது மக்களின் போராட்ட களத்திலே அவர்களுடன் நின்று அவர்களின் கோரிக்கைகளை உணர்வுகளை பிரதிபலிக்கின்றோம் என்றொரு முகத்தைக் அங்கு காட்டிவிட்டு அம் மக்களின் கோரிக்கைகளுக்கு அங்கீகாரம் வழங்கவேண்டிய ஒரு உயரிய சபையில் இன்னொரு முகத்தை காட்டுகின்ற ஒரு அரசியல் சாணக்கியத்தனத்தை கடந்த யாழ்.மாநகர சபை அமர்வின் மூலம் தெரிந்து கொண்டேன்

போராட்ட களத்திலே காணாமல் போன உறவுகளின் பக்கத்தில் நின்று 'கால அவகாசம் வேண்டாம்' என்று கைகளை உயர்த்தி உரக்க கத்தியோர் இலங்கைக்கு கால அவகாசம் வழங்குவது தொடர்பில் கடந்த மாநகர சபை அமர்வில் 'கால அவகாசம் வழங்கவேண்டும்' என்றுரைத்தது அவர்களின் இரட்டை முகத்தை அம்பலப்படுத்தியது.

இவர்கள் தமது அரசியலை, வேதனைகளுடனும் வலிகளுடனும் இழப்புக்களுடனும் போராடிக் கொண்டுடி ருக்கும் தமிழ்மக்களின் உதிரத்தாலும் கண்ணீராலும் உர மூட்ட முயலகூடாது. அவ்வாறு நாம் நடந்தால் வரலாறு எம்மை என்றும் மன்னிக்கபோவதுமில்லை.

கடந்த இரண்டு வருடங்கள் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட காலஅவகாசத்தில் அரசாங்கம் என்ன காத்திரமான நடவடிக்கைகளை எடுத்தது என்பதனை மீண்டும் அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் வலியுறுத்தும் தரப்புக்கள் தான் விடை பகீரவேண்டும்.

இன்னமும் இனவெறி ஆட்சியளர்களை ஆராதிப்பவர்களாக அவர்களின் எண்ணங்களுக்கு செயல் வடிவம் பெற்றுக் கொடுப்பவர்களாக இருந்து கொண்டு இன அழிப்புக்கான, காணமற்போன உறவுகளுக்கான நீதி கோரும் மக்கள் போராட்டக்களங்களில் மட்டும் தம்மை தமிழ்தேசியவாதிகளாக வேடமிட்டு நிற்பவர்கள்  இவ்வாறான போராட்டக்களங்களில் கால் பதிப்பது  அவ் போராட்டக்களம் அவமதிக்கப்படுவதாகவே கருதப்படும். இதனை இவ் வேடதாரிகள் உணராது விடினும் இந்த மக்களும் காலமும் அவர்களை தற்போது அடையாளப்படுத்தி வெளிக்கொண்டு வருகின்றனர் என்பதும் வெளிப்படை

யாழ்.பல்கலைக்கழக மாணவ சமூகத்தினால் பாதிக்கப்பட்ட எம் மக்களுக்கான மக்களின் நலன் பேணும் மக்களின் நியாமான கோரிக்கைகளை முன்னிறுத்தி மக்களோடு இணைந்து முன்னெடுக்கும் இவ் நீதி வேண்டிய போராட்டத்தில் நீதியற்ற நேர்மையற்ற அற்பத்தனமான சிந்தனை ஓட்டம் உள்ளவர்கள் தவிர்ந்த ஏனையோர் எழுச்சி பூர்வமாகக் கலந்து கொண்டு இப் போராட்டத்திற்கு வலு சேர்க்க வேண்டும்.

எனவே தமிழ் இன அழிப்பின் நீதிக்கான போரட்டத்தில் நீதியுடனும் நேர்மையுடனும் உண்ர்வோடும் எழுச்சி கொள்வோம் வாருங்கள்

வரதராஜன் பார்த்திபன்
யாழ்.மாநகர சபை உறுப்பினர்
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.