மக்கள் மீண்டும் போராட்டத்தை கையிலெடுக்கும் நிலை உருவாகியுள்ளது: ஐங்கரநேசன்!!

தலைமைகளிடமிருந்து மக்கள் மீண்டும் போராட்டத்தை கையிலெடுக்கும் நிலை உருவாகியுள்ளது என தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுதுரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.


அந்தவகையிலேயே, யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் மாபெரும் போராட்டம் எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்..https://www.tamilarul.net/


தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் யாழ். அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்..https://www.tamilarul.net/


அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு இணை அனுசரணை வழங்கிய இலங்கை அரசாங்கம் அதில் எதனையும் நிறைவேற்றியதாக இல்லை. காணாமல் போனோர் தொடர்பாக எவ்வித பதிலும் இல்லை. யுத்த குற்றவாளிகள் இதுவரை தண்டிக்கப்படவும் இல்லை..https://www.tamilarul.net/


இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்றது இனவழிப்பு என நாம் கூறிவரும் நிலையில், போர் இடம்பெற்ற இந்த மண்ணில் வைத்து பிரதமர் அதனை மறப்போம், மன்னிப்போம் என்கிறார்..https://www.tamilarul.net/


இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கம் ஐ.நா.விடம் மீண்டும் கால அவகாசம் கோரி நி;ற்கிறது. ஆனால், இலங்கைக்கு கால நீடிப்பு வழங்க கூடாதென தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களினால் எதிர்வரும் சனிக்கிழமை மாபெரும் எழுச்சி பேரணி நடத்தப்படவுள்ளது..https://www.tamilarul.net/


அவர்களது இப்போராட்டத்திற்கு தமிழ் தேசிய பசுமை இயக்கம் பூரண ஆதரவை வழங்கும்” எனத் தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.