சங்கதி தெரியுமே? உரையாடல்!!

பக்கத்துவீட்டு துா்க்கா வெளியே வருவதைக்கண்டுவிட்டு அவசரமாய் தானும் புறப்பட்டு வெளியே வந்தாள் மதிவதனி.


துா்க்கா      என்ன மதி, இண்டைக்கு வேளைக்கே வெளிக்கிட்டாய்                    போல?

மதிவதனி   ஓமடி, நீ நேற்றே சொன்னனி தானே, சந்தைக்கு                          வெள்ளணவே போறன் எண்டு, அதுதான் வெளிக்கிட்டு                     நிண்டன்.

துா்க்கா   ஓமோம், எனக்கு நிறைய வேலை கிடக்குத்தான், அதோட,                றோட்டுக்கு போனால் தானே நாட்டு நிலவரமும் ஏதாவது                 தெரியும்.
மதிவதனி   அது சரிதான், ஏன் நீ வானொலி கேட்கிறது இல்லையே?

துா்க்கா    எங்க, உந்த கைபேசி வந்தபிறகு வானொலி யார் வாங்கினம்?             எல்லாரும் போனிலையே எல்லாம் பாக்கிறதும், கேக்கிறதும்.

மதிவதனி  அது சரிதான், ஆனால் எங்கட வீட்ட படுக்கிற நேரம் தவிர               மற்ற நேரம் எல்லாம் வானொலி பாடினபடிதான். அப்பப்ப                  செய்தி கேட்டபடிதான்.

துா்க்கா   இப்பதான் நொடிக்கொரு வெட்டும் குத்தும் விபத்துமா கிடக்கே,             வானொலி எண்டா உடன உடன கேட்கலாம் தான்.

மதிவதனி  உப்பிடி நாட்டு நிலவரம் போனா என்னண்டு வாழப்போறமோ              தெரியேல்ல.எங்கட பழமைகளை தொலைக்கிறம்,                        புதுமைகளில எத்தனையோ நல்ல விடயங்களை இழக்கிறம்.

துா்க்கா   அது சரி, கைபேசி வந்த பிறகு வானொலி, கடிகாரம்,                      நாட்குறிப்பு, புத்தகம், எல்லாத்தையும் இழந்திட்டம்.

மதிவதனி உது மட்டுமே, பொன்னான உறவுகளையும் இழந்துதான்                   நிக்கிறம், வீட்டுக்கு விருந்தினா் வந்தாலும் நாங்கள்                      அலைபேசியைத்தான் நோண்டிக்கொண்டிருக்கிறம்,                         வர்றவையளும் அதையே தான் நோண்டிக் கொண்டிருக்கினம்.             ஆனால் ஒண்டு மட்டும் உண்மை, உந்த சமூக                           வலைத்தளங்கள் இல்லாமல் போனதும் நிறையப்போ்                    கட்டாயம் நிலைகுலையப்போகுதுகள்.

 துா்க்கா  உண்மைதான், மனம்விட்டு கதைக்கவே சினக்கிற நிலைமை             வந்திட்டுது. ஆளுக்கொரு மூலையில போனோட இருக்கிறம்.              மனிசா் எது, மட்டை எது எண்டுற பிரக்ஞையே இல்லாமல்            கிடக்குது.

மதிவதனி காலம் போற போக்கைப் பாத்தா, ஆளாளுக்கு                             பைத்தியமாத்தான் அலையப்போறம் போல கிடக்கு.

துா்க்கா  அதெண்டா உண்மைதான், விடியாத இரவைப்போல                        நீண்டுகொண்டு கிடக்கிது வாழ்க்கை. 
மதிவதனி  சரி சரி , விடு           இரவு எப்படியும் விடியத்தானே                வேணும், அதமாதிரி இந்த               வாழ்க்கையும்                  எப்படியும் முடியத்தான் போகுது.

துா்க்கா    வா வா முதல்ல பேப்பரை வாங்கிக்கொண்டு அங்கால                  போவம்.

மதிவதனி  சரி வா.

விரைந்து நடந்தனா் இருவரும்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

No comments

Powered by Blogger.