விக்ரம் மகனுடன் நடிக்கும் நயன்தாரா பட நடிகர்!

அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான ஆதித்யா வர்மா திரைப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு நாட்களுக்கு முன்னர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் அன்பு தாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
இயக்குநர் பாலா இயக்கிய வெர்ஷன் கைவிடப்பட்டு தற்போது இந்த திரைப்படம் மீண்டும் உருவாக்கப்பட்டு வருகிறது. இதில் துருவ் விக்ரமுடன் பனிதா சந்து நாயகியாக நடித்து வருகிறார்.
மேலும்  இப்படத்தில் வரும் நடிகை கதாபாத்திரத்தில் ப்ரியா ஆனந்த் நடிக்கிறார். கதாநாயகனுக்கு நண்பனாக வரும் கதாபாத்திரத்தில் மீசைய முறுக்கு, கோலமாவு கோகிலா படங்களில் நடித்த அன்புதாசன் நடிக்கிறார்.
இப்படத்திற்கு ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்ய முந்தைய வெர்ஷனுக்கு இசையமைத்த ரதன் இப்படத்திற்கும் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் முடிவடைந்து ஜூன் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.