மாதவன் படத்தில் நடிக்கும் சூர்யா, ஷாருக்!

நடிகர் மாதவன் இயக்கி நடித்து வரும் "ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட்" திரைப்படத்தில், நடிகர் சூர்யா மற்றும் பாலிவுட் நடிகர் ஷாருக் கான் ஆகியோர் கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட் என்ற பெயரில் திரவ எரிபொருளை பயன்படுத்தி ராக்கெட் அனுப்பும் திட்டத்தை வடிவமைத்த விஞ்ஞானி நம்பி நாராயணன் பற்றிய கதை படமாக உருவாகி வருகிறது. இதில் விஞ்ஞானி நம்பி நாராயணன் வேடத்தில் மாதவன் நடிப்பதோடு, இந்த படத்தையும் அவரே இயக்குகிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என 4 மொழிகளில் இப்படம் ஒரே நேரத்தில் தயாராகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட டீசர்,படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.
தற்போது இந்த படத்தில் சூர்யா, ஷாருக்கான் ஆகியோர் கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.