சிந்தையில் ஓர்.... ??? ஏதோ!


அத்தனை அளாவல்களும்
ஒரே தாளில் சிந்திக் கிடக்கிறது

பாலைவன சுடுமணலின் விசும்பல்களை
குடித்துக் குடித்து இன்பமடைகிறது
சூரியத் துகள்

பொசுங்கிப் போன ஒற்றைக் காகிதக் கற்றையை (காதலியை)
நொந்து நொந்து வாசிக்கிறான்
ஏமாற்றமடைந்த காதலன்

மேகத்தின் பளிங்குக் கற்களை
பூமியெங்கும் பதித்துவிட்டால்....
கற்பனையில் மிதக்கிறது
பொய்த்துப் போன பொறியியல் அறிவு

பட்டாம்பூச்சி மீதான அத்தனை பிரியங்களையும் தீர்த்துவிட
இறுக்க கட்டியணைத்து முத்தமிடுகிறது குழந்தை
இறந்தது என்னமோ பட்டாம் பூச்சி தான்.
குழந்தை கொலைகாரியா?

த.தமிழ்நதி
13.03.2019

No comments

Powered by Blogger.