தமிழ் மக்கள் தமது சொந்த நிலங்களையே கேட்கின்றனர்!! கூட்டமைப்பு!!

வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் தென்பகுதி மக்களின் இடங்களை கேட்கவில்லை, மாறாக தமது சொந்த நிலங்களையே அவர்கள் கோருகின்றனர்.
அவற்றை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் (வியாழக்கிழமை), வாய்மொழிமூல கேள்விக்கான பதில் நேரத்தில் அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்கள் தென்பகுதி மக்களின் இடங்களை கேட்கவில்லை, மாறாக தமது சொந்த நிலங்களையே அவர்கள் கோருகின்றனர்.இதனை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

அத்தோடு வடக்கில் தொழிற்சாலை அமைக்க வேண்டும். குறிப்பாக தற்போது வடக்கில் தொழிற்சாலைகள் இல்லாதமை காரணமாக தென்பகுதி மக்களே அதிக இலாபங்களை பெற்றுக்கொள்கின்றனர்.

ஆகவே வடக்கு கிழக்கில் உள்ள மக்களும் பயனடையும் விதமாக அங்கு தொழிற்சாலைகளை நிறுவவேண்டும். இதன் மூலம் வேலையில்லா பலரின் பிரச்சினைக்கு இது ஒரு தீர்வாக அமையும்.

அத்தோடு பல பகுதிகளில் வீதிகள் புனரமைப்பின்றி கிடக்கின்றன. அவை அனைத்தும் புனரமைக்கப்பட வேண்டும். மேலும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கூட்டறவு சங்கங்கள் இன்றுவரை புனரமைக்கப்படாமல் இருக்கின்றன அவை அனைத்தையும் மீள கட்டியெழுப்புதல் அவசியமானதாகும். இதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

மேலும் வரவு செலவு திட்டத்தில் வடக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை சரியான முறையில் கையாண்டு, வடக்கு கிழக்கு பகுதியில் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

No comments

Powered by Blogger.