மாங்குளத்தில் வீட்டுத்திட்டம் வழங்குவதிலும் மோசடி??


மாங்குளம் பிரதேசத்தில் அரசால் வழங்கப்படுகின்ற வீட்டுத்திட்டமானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரியமுறையில் சென்றடைவதில்லை .......

மாங்குளம் பிரதேசத்தில் தற்போது தனிநபர்களுக்கான வீட்டுத்திட்டமானது வழங்கப்படுகின்றது இந்நிலையில் மாங்குளத்தை பிறப்பிடமாகவும் பல வருடமாக மாங்குளம் பிரதேசத்தில் வசித்து வருகிறன்றவர்களுக்கு கொடுப்பதை விடுத்து மாறாக நீதிக்கு புறம்பாக யுத்த காலங்களில் கொழும்பிலும் வேறு இடங்களிலும். சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு வழங்கப்படுவது மிகுந்த வேதனையளிக்கின்றது.

மாங்குளம் பிரதேசத்தின் கிராம சேவகர் ஓர் ஆளுமை மிக்க நபராக இருப்பினும் இவர் மாங்குளம் கிராமத்தின் யதார்த்த நிலையை புரிந்து கொள்ள சில காலம் எடுத்தேயாகும்.

இதனை சாதகமாக பயன்படுத்தி தம்மை மாங்குளத்தின் தலைவர் போல படங்காட்டி கிராம சேவையாளர் முதல் அரச உயர் அதிகாரி வரை தமக்கு வால் பிடிப்பவர்களை கருத்தில் கொண்டு பக்கச்சார்பாக பரிந்துரைக்கின்ற  சொட்டந்தலைகளே ......!!!!

நீங்கள் திருந்தவில்லை என்றால் திருத்தப்படுவீர்கள்
நீங்கள் அடித்த அத்தனை லூட்டிகளும் வீடியோவாக வைத்திருக்கின்றோம்.
மீண்டும் மீண்டும் கூறுகின்றோம் யார் கவனிக்க தவறினும் யாம் கவனிப்போம் உங்களுடைய நடவடிக்கைகள் பக்கச்சார்பாகவும் சாதாரண மக்களை பாதிக்கும் வகையில் இருக்குமேயானால் விளைவுகளை எண்ணி வருந்த வேண்டியிருக்கும்

(புரிஞ்சா_சரி ..அன்னியன்)

No comments

Powered by Blogger.