மோடி சீன ஜனாதிபதியை கண்டு மோடி அஞ்சுகிறார் – ராகுல்!!

சீன ஜனாதிபதி சி.ஜின்பிங்கை கண்டு பிரதமர் நரேந்திர மோடி அச்சப்படுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.


குறித்த தகவலை அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர்,

மோடியின் சீன தூதரக கொள்கையாதெனில், குஜராத்தில் சீன ஜனாதிபதியுடன் உலாவுவது, டெல்லியில் அவரை கட்டியணைப்பது, சீனாவில் அவரை தலைக்குனித்து வணங்குவது ஆகியவையாகும் என தெரிவித்துள்ளார்.

ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதிகளின் பட்டியலில் சேர்க்க கோரி உலக நாடுகள் பல ஐ.நா கவுன்சிலிடம் முறையிட்டுள்ளன.

 குறித்த தீர்மானத்திற்கு எதிராக சீனா செயற்பட்டு வரும் நிலையில் ராகுல் காந்தி இவ்வாறு விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.