யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் பேராட்டத்தை குழப்பும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவாளர்களும்!!

யாழ் பல்கலைக்கழக மாணவர்களைக் குழப்பும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களும் அதாவது எதிர்வரும் 16ம் திகதி யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் பொங்குதமிழைப் போன்றதொரு மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டம்: இலங்கை அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்படவிருக்கின்றது. இந்த நிலையில் சிவில் சமூகத்தினர் வர்த்தக சங்கங்கள் தொழில் சங்கங்கள் சமா சங்கங்கள் போன்றன ஆதரவு தெரிவித்து வருகின்ற நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் சிலரும் உள்ளாட்சி உறுப்பினர்கள் சிலரும்   மாணவர்களின் முயற்சியை கிண்டல் செய்வதாகவும்  கேலி செய்வதாகவும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.


இலங்கை அரசாங்கத்திற்கு கால நீடிப்பினை வழங்கக்கூடாது என்றும் இலங்கை போர்க் குற்ற விசாரணை சர்வதேச நீதிகோரியதான கோரிக்கைகள் முன் வைத்து பேரணி ஒழுங்கு செய்துள்ள நிலையில் த.தேகூட்டமைப்பு இலங்கை அரசை சர்வதேச அளவில் காப்பாற்ற கடுமையாக பிராயத்தனம் செய்கிறது.

No comments

Powered by Blogger.