யாழ் பல்கலை மாணவர்கள், நிர்வாகத்தினரைக் குறித்தும் இணையதளங்களில் வெளியாகிய செய்திகள் உண்மைக்குப்புறம்பானவை-கி.கிருஸ்ணமீனன் மறுப்பு!!

யாழ் பல்கலைக்கழக மாணவர்களைக் குறித்தும் நிர்வாகத்தினரைக் குறித்தும் இணையதளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்குப்புறம்பானவை என முன்னாள் மாணவர் ஒன்றியத்தின் தலைவர் கி.கிருஸ்ணமீனன் மறுப்பு
யாழ் பல்கலைக்கபல்கலைக்கழகத்தின் நற்பெயரை கெடுப்பதற்காக சில தீய சக்திகள் திரைமறைவில் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டை முண்வைத்துள்ளார்.


இணையற்களில் வெளியாகிய செய்தி தலைப்பாக 
#உள்ளாடையை #வாய்க்குள் #வைத்து #பகிடிவதை #செய்ததால் #யாழ்_பல்கலை #மாணவி #தூக்கிட்டு #உயிரிழப்பு

இவ் குற்றச்சாட்டை மறுத்து முன்னாள் மாணவர் ஒன்றியத்தின் தலைவர் கி.கிருஸ்ணமீனனின் கருத்த தெரிவிக்கையில், ,

 நேற்று மாலை யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் கல்வி கற்கும் அனுராதபுரத்தை சேர்ந்த மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக பல இணையதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அவ்வாறான செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என்றே நான் கருதுகிறேன்.

 அவ்வாறான சம்பவங்கள் எதுவும் எந்தவொரு பீடங்களிலும் நடைபெற்றதாக தமக்கு எதுவிதமான தகவலும் கிடைக்கவில்லை என நிர்வாகத்தினரை தொடர்பு கொண்டு கேட்ட போது என்னிடம் தெரிவித்தனர்

அதாவது மேற்குறிப்பிடப்பட்ட இணையதளத்தில் வரும் செய்தியானது உண்மைக்குப் புறம்பான ஒரு செய்தியாகும். அதாவது  இவ்வாறான சம்பவம் நடைபெற்றுள்ளதா என   யாழ் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு  வினவியபோது இதுவரையில் அவ்வாறான ஒரு சம்பவம் நடைபெற்றதாக எந்த ஒரு பீடத்திலிருந்தும் தங்களுக்கு அறிவித்தல்  வரவில்லை என்றும் அவ்வாறான சம்பவம்  நடைபெறவில்லை என்றும் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
சில சமயங்களில் குறித்த மாணவியின் இறப்பு சம்பவம் வீட்டிலோ அல்லது அவரின் ஊரிலோ நடைபெற்றிருக்கலாம். ஆனாலும் அவ்வாறு நடைபெற்றதற்குக்கூட தங்களுக்கு உத்தியோகபூர்வமாக எந்தவொரு அறிவித்தலும்  வரவில்லை என யாழ் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.

அதாவது எமது மாணவர்களால் ஒழுங்கு செய்யப்படுகின்ற இன அழிப்பிற்கு நீதி கோரியதான (மார்ச்16)  இந்த எழுச்சிப் போராட்டத்தினைக் குழப்புவதற்காக மேற்கொள்ளப்படும் ஒரு சேறு பூசல் நடவடிக்கையே இவ்வாறான வதந்திகளை உண்மைக்குப் புறம்பான செய்திகளை ஒரு சில இணையத்தளங்கள் பொறுப்பற்ற வகையில் வெளியிட்டு வருவது மிகவும் வேதனைக்குரியது.

யாழ் பல்கலைக்கழகத்தில் பல்வேறுபட்ட இனத்தை சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்கின்றனர். அந்த வகையில் சிங்கள மாணவர்கள் தவறு செய்தாலும் சரி தமிழ் மாணவர்கள் தவறு செய்தாலும் சரி யாழ் பல்கலைக்கழபல்கலைக்கழகத்தில் நடைபெற்றதாகவும் யாழ் பல்கலைக்கழகபல்கலைக்கழக  மாணவர்கள் என்ற பொதுப்பெயரை சுட்டி செய்திகள் வெளியாகின்றன. இது குறிப்பாக தமிழ் மாணவர்களையே அதிகம் பாதிக்கின்றது.

சில இணையத்தள ஊடகங்கள் தகவலை உறுதி செய்யாமல் உண்மைத்தன்மையை அஅறியாமல் செய்தியை பிரசுரிப்பது வருந்ததக்க விடையமாகும். யாழ் பல்கலைக்கழகம் என்னும் தமிழ் சமூகத்தின் விம்பத்தை நற்பெயரை சம்பாதிக்க மாணவர்கள் விரிவுரையாளர்கள் ஊழியர்கள் என பலரும் எண்ணற்ற தியாகங்களை செய்துள்ளனர் என்பது உலகறிந்த விடயமாகும். அதனை ஒரு சிலர் சிதைத்து விடலாம் என எண்ணுகின்றனர்.

  அதற்காக எங்களிடம் தவறு இல்லை என்பது அல்ல தவறுகள் எங்குமே நடைபெறுகின்றது அதனைத் நாம் திருத்திக் கொள்ள வேண்டும். திருத்திக் கொள்வோம்

யாழ் பல்கலைக்கழக மாணவர்களது போராட்டமானது சமூகத்திலே மிக முக்கிய இடம் பெறுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு போராட்டத்திலும் மாணவர்கள் காத்திரமான பங்களிப்பை வழங்கி வருகின்றனர். அந்த போராட்டமானது நலிவுபடுத்தப்பட வேண்டும் அந்த போராட்டம் வெற்றிபெறக்கூடாது மக்கள் போராட்டத்திற்கு செல்லக்கூடாது என்றும் நினைக்கும் தீய சக்திகள் இவ்வாறான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள்.
இது முற்றுமுழுதாக ஒரு திட்டமிட்ட சதியாகும்.

தற்போது இதுவரையில் அவ்வாறான சம்பவங்கள் எதுவுமே  பதிவாகப்படவில்லை. என நிர்வாகம் உறுதிப்பட தெரிவித்துள்ளது. இது மிகவும் வருத்தப்படக்கூடிய விடயமாகும். இந்த விடயத்திலே மக்கள் மிகவும் தெளிவாக  இருக்க வேண்டும். சமூகத்திலே அக்கறை கொண்டவர்களாக எப்பொழுதும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருப்பார்கள்.

#பல்கலை_மைந்தன்

No comments

Powered by Blogger.