ரசிகர்களைக் காப்பாற்ற ஓடிய நடிகர் விஜய்... ஷூட்டிங்கின்போது நடந்த சம்பவம்!

நடிகர் விஜய், நடித்து வரும் `தளபதி 63'  படத்தின் ஷூட்டிங் சென்னை எஸ்.ஆர். எம். பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்று வருகிறது.
இரு நாள்களுக்கு முன், படப்பிடிப்பில் பங்கேற்றிருந்த நடிகர் விஜய்யைப் பார்க்க ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் ரசிகர்கள் திரண்டனர். நடிகர் விஜய்யை பார்க்கும் ஆவலில் அவர்கள்  கூச்சலிட்டுக்கொண்டிருந்தனர். படப்பிடிப்பின் ஓய்வு நேரத்தில், ரசிகர்களைக் காண அவர்களை நோக்கி நடிகர் விஜய் வந்தார். அப்போது, கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனால், அங்கே போடப்பட்டிருந்த இரும்புக் கம்பி வேலி ஒரு பக்கமாக சாயத் தொடங்கியது. இதைப் பார்த்ததும் நடிகர் விஜய் மற்றும் அவருடன் இருந்தவர்கள் கம்பி வேலி சாய்ந்து விடாமல் உள் பக்கமாக தடுத்து நிறுத்தினர். இதனால், அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. ரசிகர்களுக்கு ஏதாவது காயம் ஏற்பட்டுள்ளதா என்றும் நடிகர் விஜய் விசாரித்த பின்னரே அங்கிருந்து சென்றுள்ளார். இந்த சம்பவத்தை வீடியோவாகப் பதிவு செய்த ரசிகர் அதை இணையத்தில் பதிவேற்றினார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. `நடிகர் விஜய் சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும் ஹீரோதான்' என்று அவரின் ரசிகர்கள் புகழாரம் சூட்டி வருகின்றனர்.

தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து அட்லியுடன் 3- வது படத்தில் `தளபதி 63' படத்தில் நடிகர் விஜய் இணைந்துள்ளார். இந்தப் படம் விஜய்யின் 63-வது படம் என்பதால், தற்காலிகமாக இப்படி பெயர் சூட்டப்பட்டுள்ளது. நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். விவேக், யோகி பாபு ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். விளையாட்டை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

No comments

Powered by Blogger.