``நாங்களும் ரவுடிதான்"- கொத்தி தீர்த்த கோழிகள்!

பிரெஞ்சு நாட்டின் வடகிழக்குப் பகுதியிலுள்ள கோழிப் பண்ணையில் நடந்துள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
அங்கிருந்த கோழிகள் சேர்ந்து இரவோடு இரவாக ஒரு நரியைக் கொன்றதுதான் அந்த `தரமான' சம்பவம்.
அங்கிருக்கும் வேளாண் பள்ளி ஒன்றில் அமைந்திருக்கும் கோழிப் பண்ணையில் இரவு நேரத்தில் சூரிய ஒளி இல்லையென்றால் மூடிக்கொள்ளும் தானியங்கி கதவு ஒன்றில் வழி தெரியாமல் உள்ளே வந்து வெளியே செல்லமுடியாமல் அந்த நரி சிக்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. காலையில் கோழிகளைப் பார்க்க வந்த மாணவர்கள் இறந்து கிடந்த நரியைப் பார்த்திருக்கின்றனர். இது மிகவும் இளம் நரியாக இருந்திருக்கின்றது.
இது எப்படி நடந்திருக்கும் என அங்கிருந்தவர்கள் விளக்கியுள்ளனர். இரவு இப்படி நரியைப் பார்த்த கோழிகளுக்கிடையே ஓர் எச்சரிக்கை உணர்வு பரவத்தொடங்கியிருக்க வேண்டுமாம். பின்பு அனைத்துக் கோழிகளும் சரமாரியாக அந்த நரியை அவற்றின் அலகால் தாக்கி கொன்றிருக்க வேண்டும். இந்தக் காயங்கள் நரியின் உடலில் காணப்பட்டுள்ளது. காலை முழுவதும் திறந்தே இருக்கும் இந்தப் பண்ணையில் முட்டைகளை அடைகாக்கும் காலத்தைத் தவிர மற்ற நேரங்களைச் சூரிய ஒளியில் வெளியிலேயே கழிக்கின்றன இந்தக் கோழிகள். இதனால் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் கோழிகளை இவற்றுக்கு ஆக்ரோஷம் அதிகமாக இருந்திருக்கிறது என்கின்றனர்.
நரி
மேலும், ஒரு வருடத்துக்கு முன்பு இதேபோன்று நரி ஒன்று உள் நுழைந்தபோது கோழிகள் சில அதற்கு இரையாகியுள்ளது. இந்த முறை சுதாரித்த கோழிகள் முதல் அடியை வைத்துள்ளன. இந்த `ஆக்ரோஷ' கோழிகள்தான் இப்போது உலகம் முழுவதும் டிரெண்ட் ஆகிவருகின்றன!
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.