இந்தியாவில் 6 அணுமின் நிலையங்கள்!

இந்தியாவில் 6 அணுஉலைகளை அமெரிக்கா ஏற்படுத்தித் தருவதற்கு, இரு நாடுகளிடையே இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.


அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கேசவ் கோகலே, அந்நாட்டு வெளியுறவுத்துறை உயரதிகாரி ஆண்ட்ரியா தொம்சனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 2 நாட்கள் நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து, அமெரிக்கா 6 அணு உலைகளை இந்தியாவில் ஏற்படுத்தித் தருவதற்கான ஒப்பந்தம் இன்று (வியாழக்கிழமை) கைச்சாத்திடப்பட்டது.

மேலும் பாதுகாப்பு மற்றும் சிவில் அணு ஒத்துழைப்பில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்த இருவரும் ஒப்புக்கொண்டனர்.

அந்தவகையில், 48 நாடுகள் கொண்ட அணுசக்தி விநியோக கூட்டமைப்பில் என்.எஸ்.ஜியில், இந்தியாவை உறுப்பினராக இணைத்துக்கொள்ள அமெரிக்கா தனது உறுதியான ஆதரவை அளிக்கும் என இந்தியாவிடம் உறுதி அளித்தது.

இதேவேளை, அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல், இந்தியாவை என்.எஸ்.ஜியில் உறுப்பு நாடாக இணைக்கக்கூடாது என்று சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.