நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு!!

18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மைய்யம் போட்டியிட உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.


மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம்  போட்டியிடுகின்றது. இந்த தொகுதிகளில் போட்டியிட விரும்புவோர் இன்று (வியாழக்கிழமை) முதல் விருப்ப மனுக்களை பெறலாம்.

அதேவேளை, பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுவை அளிக்க நாளை மறுநாள் இறுதிநாளாகும்.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர் அறிமுக விழா, கோவையில எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறுமென அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுகின்றது. வேட்பாளர் தேர்வில் இதுவரை 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இன்னும் 2 நாட்களுக்கு நேர்காணல் நடைபெறவுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.