பொள்ளாச்சி குற்றவாளிகளுக்கு பொதுமக்கள் முன்னிலையில் தண்டனை!

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை மக்கள் முன்னிலையில் தண்டிக்க வேண்டும், அவர்களைத் தூக்கிலிடவேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து திருச்சியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கி உள்ளது. சமூக வலைதளங்களில் நண்பர்களாகப் பழகி பல இளம்பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்த பொள்ளாச்சி குற்றவாளிகளுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இதேபோல் இந்தச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கல்லூரி மாணவர்கள், சமூக அமைப்புகள் ஆங்காங்கே சாலைமறியல், ஊர்வலம், போராட்டம் எனப் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்புடைய பாலியல் குற்றவாளிகளை மக்கள் முன்னிலையில் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இன்று கலை ஆர்ப்பாட்டம் நடத்திட அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், போலீஸார், அனுமதி மறுத்தனர். இதனையடுத்து தடையை மீறி மக்கள் அதிகாரம் அமைப்பினர் போராட்டத்தை நடத்தியே தீருவோம் என உறுதியாக இருந்த நிலையில் இன்று காலை அனுமதி வழங்கப்பட்டது. அதனையடுத்து அந்த அமைப்பின் மகளிர் அணி வகுப்பு நிர்மலா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் புரட்சிகர மாணவர் இயக்கத்தின் நிர்வாகி கணேசன் சிறப்புரையாற்றினார்.
மக்கள் அதிகாரம் அமைப்பினர்
மேலும் ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா, சி.பி.ஐ மாவட்டச் செயலாளர் திராவிடமணி, தமிழக விவசாயிகள் சங்க தலைவர் ம.பா.சின்னதுரை, ம.க.இ.க ஜீவா, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் ஆதிநாராயணன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். போராட்டத்தில், ``கொடுமையான இந்தச் சம்பவத்தைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும், எவ்வளவு அதிகாரத்தில் இருந்தாலும், அவர்கள் மீது எந்தவித பாரபட்சமும் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் தண்டிக்கும் வரை பொதுமக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது இல்லை. அகிம்சை வழியில் போராட்டங்கள் தொடங்கியுள்ளது. பல்வேறு கட்டங்களில் போராட்டத்தை நடத்தத் தொடங்கியுள்ளனர். பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். பொள்ளாச்சி பாலியல் சம்பங்களில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிட வேண்டும். இந்த வழக்கினை சி.பி.ஐ, சி.பி.சி.ஐடி விசாரணை செய்வது குற்றவாளிகளைப் பாதுகாக்கும்விதமாக உள்ளது. குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டிருப்பது போதாது. அவர்கள் அனைவரையும் பொதுமக்கள் முன்னிலையில் நிறுத்தி தண்டிக்க வேண்டும்" என முழங்கினர்.
மக்கள் அதிகாரம் அமைப்பினர்
போராட்டத்தில் போராட்டக்காரர்கள், பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளின் புகைப்படங்கள் உள்ள பேனரை துடைப்பத்தாலும், செருப்பாலும் அடித்து தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். மேலும் பாடகர் கோவன், லதா குழுவினர் பாட்டுப்பாடி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.