விநோதமான தவளை - மேற்குத் தொடர்ச்சி மலையில் கண்டுபிடிப்பு!!

ஆரஞ்சு நிற வயிறு, பழுப்பு நிறப் பின்புறம், வானத்தில் விண்மீன்களைப் பார்ப்பது போல உடல் முழுக்கக் காணப்படும் சிறிய புள்ளிகள் என அந்தத் தவளையின் தோற்றமே மிக வித்தியாசமாக இருக்கிறது.
கேரளாவின் வயநாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையுச்சியில் உள்ள உதிர்ந்த இலைக் குப்பையில் இந்த விநோதமான தவளை கண்டுபிடிக்கப்பட்டது. அதுவும் இன்று, நேற்று இல்லை ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு 2010 ம் ஆண்டு ஜுன் மாதம் இதைக் கண்டுபிடித்தனர். தவளையைக் கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர் எஸ்.பி. உதயகுமார் மற்றும் அவரது குழுவினர் இதை ஆராய்ச்சிக்கு உட்படுத்தினர். ``நான் நினைத்த மாதிரியே தவளைகளிலேயே இவை புதிய இனங்கள். வித்தியாசமான உடலமைப்பு, உருவம் மற்றும் நிறம் என இவற்றின் குணங்கள் மேற்குத் தொடர்ச்சி மலையின் மற்ற எந்தத் தவளைகளிலும் இல்லை" என்கிறார் இந்திய அறிவியல் கழகத்தின் (Indian Institute of Science) சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளரான எஸ்.பி. விஜயகுமார். 2 செமீ - 3 செமீ நீளம் உடைய இந்தத் தவளைக்கு ஆஸ்ட்ரோபாத்ராஸ் குரிச்சியானா (Astrobatrachus kurichiyana) எனப் பெயர் சூட்டியுள்ளனர். நட்சத்திரம் போன்ற புள்ளிகள் காணப்படுவதால் நட்சத்திரக் குள்ள தவளைகள் என்றும் அழைக்கின்றனர்.

ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் அமெரிக்காவின் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் (George Washington University) சேர்ந்தவர்களும் இணைந்து தவளையின் உடல், எலும்பு மற்றும் மரபணு பண்புகள் எனப் பல வழிகளில் ஆய்வுகள் நடத்தினர். வயநாட்டில் காணப்படும் மற்ற தவளைகளோடு இவை ஒத்துப் போகவில்லை என்பதால் இதே அளவுடைய உலகத்தில் உள்ள மற்ற பல்வேறு தவளைகளோடும் அருங்காட்சியகத்தில் உள்ள தவளை மாதிரிகளோடும் ஒப்பிட்டுப் பார்த்தனர். அவற்றில் தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள சில தவளைகளின் சில உடற்கூறுகளோடு மட்டுமே ஒத்துப் போவதாக தெரிவித்துள்ளனர். இதன் மரபணு பண்புகள் ஆய்வுகள் இன்னும் சில ஆச்சர்யங்களைத் தருகின்றன. பல ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த Nyctibatrachidae எனும் தவளை குடும்பத்துடன் நெருங்கிய  தொடர்புடையவை இந்த நட்சத்திரக் குள்ள தவளைகள். மேலும் இவையும் ஆறு கோடி ஆண்டுகளுக்கு முந்தையவை. மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் பல்வேறு தவளைகளுக்கும் இந்தப் பண்டைய பாரம்பார்யம் உண்டு. ஏனென்றால் மேற்குத் தொடர்ச்சி மலையானது மனிதர்கள் தோன்றுவதற்கு முன்பே தோன்றிய மலை. மேலும் அதன் உயிர்ப் பல்வகைத்தன்மை என்பது இன்னும் மனிதர்களால் முழுமையாகக் கண்டறியப்படவில்லை.   
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.