திமுக கூட்டணி போட்டியிடும் 40 தொகுதிகள்!!

மக்களவைத் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் 40 தொகுதிகளின் பட்டியலையும் தங்களது அணியின் பெயரையும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி, தமிழகம் உள்ளிட்ட 40 தொகுதிகளில் காங்கிரஸுக்கு 10 தொகுதிகளும், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், மதிமுக, முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதியையும் திமுக ஒதுக்கியுள்ளது. இந்தக் கட்சிகளுக்கு ஒதுக்கியது போக மீதமுள்ள 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் தொடர்பாகவும், உடன்பாடு ஏற்பட்டு, அதற்கான ஒப்பந்தங்களிலும் கட்சித் தலைவர்கள் கையெழுத்திட்டிருந்தனர்.
தலைவர்கள் ஆலோசனை:இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலர் வீரபாண்டியன், முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் பாரிவேந்தர் ஆகியோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டம் சுமார் 45 நிமிஷங்களுக்கும் மேலாக நடைபெற்றது.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி: கூட்டத்துக்குப் பிறகு திமுக அணி போட்டியிடும் தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களின் முன்னிலையில் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதையடுத்து அவர் கூறியது:
கடந்த மூன்று ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகளுடைய தவறுகளைச் சுட்டிக்காட்டி ஒருங்கிணைந்து போராட்டம் நடத்தும் கட்சிகளாக திமுக அணியில் இடம்பெற்றிருந்த கட்சிகள் இருந்தன. அந்தத் தோழமைக் கட்சிகள் இந்த மக்களவைத் தேர்தலில் இன்னும் சிறப்பான வகையில் கூட்டணியாக மாறியுள்ளன. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி என்ற பெயருடன் தேர்தல் களத்தில் ஈடுபட உள்ளோம். மிகப்பெரிய வெற்றியைத் தரப்போகும் கூட்டணி என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்பு:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகப்பட்டினத்தில் எம். செல்வராசு, திருப்பூரில் கே. சுப்பராயன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோயம்புத்தூரில் பி.ஆர்.நடராஜனும், மதுரையில் எழுத்தாளர் சு.வெங்கடேசனும் போட்டியிடுகின்றனர் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் கே.நவாஸ்கனி போட்டியிடுகிறார்.
திமுக கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப் பட்டியலை வெள்ளிக்கிழமை வெளியிடுகிறார்,திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். உடன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் (இடமிருந்து) தேவராஜ், காதர்மொகிதீன், பாலகிருஷ்ணன், அழகிரி, துரைமுருகன், வைகோ, வீரபாண்டியன், திருமாவளவன், பாரிவேந்தர்.
திமுக 20
வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் (தனி), அரக்கோணம், வேலூர், தருமபுரி ,திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம்
நீலகிரி (தனி), பொள்ளாச்சி, திண்டுக்கல், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், தூத்துக்குடி, தென்காசி (தனி), திருநெல்வேலி,
காங்கிரஸ் 10
திருவள்ளூர் (தனி), கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி, புதுச்சேரி
மதிமுக 1
ஈரோடு
இந்திய ஜனநாயகக் கட்சி1
பெரம்பலூர்
மார்க்சிஸ்ட் 2
கோயம்புத்தூர், மதுரை
முஸ்லிம் லீக்1
ராமநாதபுரம்

விடுதலைச் சிறுத்தைகள் 2
விழுப்புரம் (தனி), சிதம்பரம் (தனி)
இந்திய கம்யூனிஸ்ட் 2
திருப்பூர், நாகப்பட்டினம்
கொமதேக 1
நாமக்கல்
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.