நியூசிலாந்து துப்பாக்கிதாரியின் பதில்!!

நியூசிலாந்தின் மசூதி துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள ப்ரெண்டன் டர்ரன்ட் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தன்னை ஒரு சாதாரண வெள்ளையின ஆண் என குறிப்பிட்டுள்ளார்.


அவுஸ்திரேலியாவை சேர்ந்த 28 வயதான இவர் பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் துப்பாக்கிசூட்டு சம்பவத்தை நேரடி ஒளிபரப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது.

டர்ரன்ட் எழுதியதாக நம்பப்படும் 74 பக்க அறிக்கையில் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான தனது நோக்கங்களை அவர் விவரித்துள்ளதுடன் புலம்பெயர்ந்தோரை தனது மக்களின் நிலங்களை ஆக்கிரமிப்பவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்பாக கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவரென அந்நாட்டு பிரதமர் ஸ்கொட் மொரிசன் உறுதிப்படுத்தியுள்ளார்.

துப்பாக்கிதாரியால் எழுதப்பட்டதாக நம்பப்படும் இந்த அறிக்கை இணையத்தளமொன்றில் பதிவிடப்பட்டுள்ளது. இவ்வறிக்கையில் தொடர்ச்சியான கேள்விகளும் பதில்களும் இடம்பெறுகின்றன.

இதை முதலாவது கேள்வியாக ‘நீங்கள் யார்’ என்பது இடம்பெற்றுள்ளது. இக்கேள்விக்கு ‘நான் 28 வயதான சாதாரண வெள்ளையின மனிதன். அவுஸ்திரேலியாவில் குறைந்த வருமானம் உள்ள தொழிலாளர் வர்க்கக் குடும்பமொன்றில் பிறந்தேன்’ என்பது பதிலாக அமைந்துள்ளது.

“என் பெற்றோர் ஸ்கொட்டிஷ், ஐரிஷ் மற்றும் ஆங்கில இனங்களைச் சேர்ந்தவர்கள். எந்தவொரு பெரிய பிரச்சினையும் இல்லாத வழக்கமான சிறுபராயம் எனக்கு கிடைத்தது. கல்வியில் எனக்கு பெரிதாக ஆர்வமிருக்கவில்லை.

நான் ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த வழக்கமான வெள்ளை மனிதன். எனது இன மக்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்துவதற்காகவே நான் இச்செயலை செய்தேன்.’

டர்ரன்ட் தன்னை தனிப்பட்ட மற்றும் பெரும்பாலும் உள்முகமான நபராக விவரித்துள்ளதுடன் மற்றும் அவர் இனவெறி பிடித்தவர் எனவும் ஒப்புக்கொண்டுள்ளார்.

நியூசிலாந்தில் தாக்குதல் தனக்கு நடத்துவதற்கு உண்மையில் விருப்பமில்லை என குறிப்பிட்டுள்ள டர்ரன்ட் தற்காலிகமாக திட்டமிடுவதற்கும் பயிற்சியளிப்பதற்குமே நியூசிலாந்துக்கு வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

No comments

Powered by Blogger.