2 விமான விபத்துகளுக்கும் ஒரு சென்சார்தான் காரணம்?! சிக்கலில் போயிங்!!

இதுவரைக்கும் நடந்த இரண்டு கோர விமான விபத்துக்களுக்குக் காரணம் ஒரே ஒரு மென்பொருள்தான் என்றால் நம்புவீர்களா?
இந்த ஒரு சென்சார்தான் 2 விமான விபத்துகளுக்கும் காரணம்?! சிக்கலில் போயிங்.

விமான தயாரிப்பை பொறுத்தவரை போட்டி என்பது இரண்டே நிறுவனங்களுக்குத்தான். ஒன்று போயிங், மற்றொன்று ஏர்பஸ். உலகமெங்கும் இயங்கும் விமான சேவைகளை வாங்கி வைத்திருக்கும் விமானங்கள் இந்த நிறுவனங்களுடையதுதான். காரணம் இவை தயாரிக்கும் விமானங்களில் இருக்கும் தரமும் கொடுக்கப்படும் கூடுதல் வசதிகளும்தான். ஆனால், தற்போது போயிங் நிறுவனம் இந்த விஷயத்தில் பெரும் சிக்கல் ஒன்றைச் சந்தித்துவருகிறது. உலகம் முழுவதும் 50-க்கும் மேலான நாடுகளில் போயிங் 737 MAX 8/9 ரக விமானங்களைப் பறக்க தற்போது தடைவிதிக்கப்பட்டுள்ளது.

போயிங் நிறுவனத்தின் புதிய ரக விமானங்களான இவை 737 MAX 8 கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் இரண்டு கோரமான விபத்துகளைச் சந்தித்துள்ளன. முதல் விபத்து கடந்த வருடம் அக்டோபர் மாதம் இந்தோனேசியாவில் நிகழ்ந்தது. லயன் ஏர் (Lion Air) சேவையின் விமானம் ஜாவா கடலில் விழுந்ததில் 189 பேர் உயிரிழந்தனர். இப்போது இரண்டாவதாக எத்தியோப்பியா நாட்டில் மேலும் ஒரு பயங்கர விபத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்துள்ளது. எத்தியோப்பியன் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான 737 MAX 8 விமானம் தரையில் மோதி 157 பேர் உயிரிழந்துள்ளனர். இப்படி அடுத்தடுத்து விபத்துகள் நடப்பதால் இந்த விமானம் பறக்க பாதுகாப்பானதுதானா என்ற சந்தேகம் உலகமெங்கும் எழுந்துள்ளது. முதலில் சீனா இந்த ரக விமானங்கள் தங்கள் வான் எல்லையில் பறக்கக் கூடாதென தடைவிதிக்க இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, நியூஸிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா எனப் பல நாடுகள் இப்போது 737 MAX 8 பறக்கக் கூடாதென உத்தரவிட்டுள்ளனர்.


பயணிகள் சொகுசு விமானமான இந்த போயிங் 737 MAX 8 ரக விமானங்களை முதன்முதலில் 2017-ம் ஆண்டு மலிண்டோ ஏர்லைன்ஸ் என்னும் நிறுவனம் வாங்கி பயன்படுத்தியது. 39.2 மீட்டர் நீளம், 12.2 மீட்டர் உயரம், 35.9 மீட்டர் நீள இறக்கைகள் கொண்டுள்ளது இதில் ஒரே சமயத்தில் 210 பயணிகள்வரை இதில் பயணம் செல்லலாம். இதில் LEAP-1B என்ற இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதை CFM international என்ற நிறுவனம் தயாரிக்கிறது. எரிபொருள் சேமிப்புதான் இதன் ஹைலைட். ஒரு விமானத்தின் விலை 121 மில்லியன் டாலர்கள் (இந்தியா ரூபாயில் சுமார் 837 கோடி). இதுவரை 376 737 MAX விமானங்கள், போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு விற்கப்பட்டுள்ளன.

எத்தியோப்பியா விபத்தைப் பற்றிய விசாரணை முழுவீச்சில் நடந்துகொண்டிருக்கிறது. விமானத்தின் கறுப்பு பெட்டி மீட்கப்பட்டு அதில் இருக்கும் தகவல்கள் சேகரிக்கப்பட்டுவருகின்றன. இந்த விபத்து நடந்ததற்கு உண்மையான காரணம் என்பது சில நாள்களில் தெரியும். ஆனால், இந்த விபத்துக்கும் கடந்த ஆண்டு இந்தோனேசியாவில் நடந்த விபத்திலும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. அது என்ன என்று பார்ப்பதற்கு முன் இந்தோனேசியா லயன் ஏர் விபத்து நடந்தது எப்படி என விரிவாகப் பார்ப்போம்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

No comments

Powered by Blogger.