பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதில்லை: இந்தியா!

பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதவரை பாகிஸ்தானுடன் எந்தவிதப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடப்போவதில்லையென இந்திய மத்திய அரசாங்கம் மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளது.


பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் மேற்கொள்ளும் விடயங்கள் குறித்து நேற்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

“பயங்கரவாதம் தொடர்பாக பாகிஸ்தான் தொடர்ந்து இரட்டை வேடம் போடுவது முட்டாள்தனமாகும்.

மேலும், ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்க தலைவர் மசூத் அசார் பாகிஸ்தானில் இருப்பதாக பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், அதனை அந்நாட்டு இராணுவம் மறுத்து வருவதிலேயே பாகிஸ்தானின் இரட்டை வேடம் உறுதியாகியுள்ளது.

பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடான இந்தியா, அந்த பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினால், அவர்களுக்கு ஆதரவாகத்தான் இந்தியாவை பாகிஸ்தான் தாக்குகிறது

ஆகவே பயங்கரவாதம் இல்லாத அமைதியான சூழல் நிலவினால் மாத்திரமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியும்” என சுஷ்மா சுவராஜ் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.