தமிழர்களுக்கான நீதி கிடைப்பதற்காக அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கோரிக்கை!!

நாளை யாழ்ப்பாணத்தில் ஏற்பாடாகி இருக்கின்ற மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பமான வாகன பேரணியானது கிளிநொச்சி முல்லைத்தீவு  வவுனியா மன்னார் ஆகிய மாவட்டங்கள் ஊடாக மீண்டும்  யாழ்ப்பாணத்தை சென்றடைய உள்ளது.
போராட்டத்திற்கான வலு சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள  வாகன அணி இன்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகை தந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு உடையார்கட்டு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு முள்ளியவளை ஒட்டுசுட்டான்  நெடுங்கேணி பகுதி ஊடாக வவுனியாவை  சென்றடைந்துள்ளது . குறித்த நகர்ப்பகுதிகளில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் முகமாக மக்களை போராட்டத்திற்கு அழைக்கும்  முகமாக துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டதோடு அனைத்து தரப்பினரையும் நாளை யாழ்ப்பாணத்தில் இடம்பெற இருக்கின்ற மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு தமிழர்களுக்கான நீதி கிடைப்பதற்காக அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


No comments

Powered by Blogger.