சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ள யாழ் பல்கலைக்கழக மாணவர்களது போராட்டம்.!

நாளைய தினம் யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இன விடுதலைக்கான இன அழிப்பு மற்றும் போர்க் குற்ற விசாரணை குறித்த போராட்டமானது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது Chanel 4

உட்பட பல சர்வதேச மற்றும் தென்னிலங்கை ஊடகங்கள் நாளைய போராட்டத்திற்கு யாழ் நோக்கி இப்பவே
படையெடுக்க தொடங்கியுள்ளது. கடந்த வருடம் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி யாழ் பல்கலையில் இருந்து அனுராதபுரம் வரையில் கால் நடையாக நடந்து சென்று தென்னிலங்கை இனவாதிகளை கதி கலங்க வைத்தனர். அதன் தொடர்ச்சியாக தமிழ் இனத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகள் மற்றும் தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சினைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி மாபெரும் எழுச்சிப் பேரணியை யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து ஒழுங்கு செய்துள்ளனர். விடுதலைப் புலிகளின் காலத்திற்கு பின்னர் ஒழுங்கு செய்யப்படுகின்ற மாபெரும் பொங்குதமிழைப் போன்றதொரு எழுச்சிப் போராட்டமாக இது அமையும் என அரசியல் ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.