தயாரிப்பாளர்கள் சங்கம் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கப்படும் - எஸ்.ஆர். பிரபு!!

தயாரிப்பாளர்கள் சங்கம் மீது இருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த ஆதாரங்களுடன் பதிலளிக்கப்படும் எனச் சங்கத்தின் பொருளாளர் எஸ்.ஆர். பிரபு கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் சங்கங்களில் முக்கியமான சங்கமாக கருதப்படுவது தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம். விஷால் தலைவராகப் பொறுப்பேற்று பதவிக்காலமான இரண்டு வருடங்கள் முடியவுள்ள நிலையில், அவரது அதிருப்தியாளரும் எதிர்த்து போட்டியிட்ட தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அணியினர் சங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து வழக்குத் தொடுத்தனர்.
விஷால்
அதன் அடிப்படையில்  நீதிமன்றம் தமிழ அரசை தகுந்த சோதனைகள் நடத்த உத்த்ரவிட்டது. தமிழக சஙகங்கள் பதிவு சட்டத்தின் வரைமுறைகளுக்கு உட்பட்டு ஆய்வுகளை மேற்கொண்டு தமிழக அரசு நான்கு குற்றச்சாட்டுகளை முன்னிறுத்தி அதற்கான விளக்கம் கேட்டுத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
2017-ம் ஆண்டு முதல் இன்றைய தேதி வரைக்கும் வருடாந்தர முறையில் நடத்தப்பட வேண்டிய பொதுக்குழு நடத்தாமல் இருப்பது, செயற்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் இல்லாமல் பதிவாளருக்குத் தெரிவிக்காமல் சங்கத்தின் நிர்வாக அலுவலகத்தை தி.நகருக்கு மாற்றியது, அந்த அலுவலகத்துக்கு சங்க நிதியிலிருந்து வாடகை மற்றும் முன் பணமாகச் செலவழித்தது, காரணமின்றி நிர்வாகிகள் பதவி விலகியது,  மூத்த சங்க உறுப்பினருக்கு (தயாரிப்பாளருக்கு) பென்ஷன், தீபாவளிப் பரிசு, உறுப்பினரின் குழந்தைகளுக்கு உதவித்தொகை, உறுப்பினர் மகள்/மகன் திருமணத்துக்கு உதவித்தொகை எனச் சங்கத்தின் விதிகளுக்கு மாறாக வழங்கியது என நான்கு விஷயங்களுக்கு விளக்கம் கேட்டு தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஏற்ற பதிலை 30 நாள்களில் அளிக்கவில்லை என்றால் சங்கங்கள் பதிவு சட்டம் 1975 விதிகளின் கீழ் நீதிமன்றம் நியமிக்கும் தனி அலுவலர், அடுத்த சங்கத் தேர்தல் நடக்கும்வரை சங்க அலுவல்களைக் கவனிக்க நேரிடும் எனவும் அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் கடந்த மார்ச் 3-ம் தேதி நடக்கவிருந்த பொதுக்குழு கூட்டம் மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.  
எஸ்.ஆர்.பிரபு
இதுகுறித்து பேசிய தயாரிப்பாளர் சங்கப் பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு," அரசு அனுப்பியுள்ள நோட்டீஸுக்கு குறிப்பிட்டுள்ள தேதிக்குள் பதில் அனுப்பப்படும். சங்க வரைமுறைகளுக்கு உட்பட்ட சங்கத்தின் அலுவல்கள் இருந்துள்ளது. மார்ச் 3-ம் தேதி நடக்கவிருந்த பொதுக்குழு கூட்டம் இடம் மற்றும் கால அவகாசம் குறைவாக இருப்பதாகக் கருதிய தனி அலுவலர் நீதியரசர் கே.என். பாஷா இந்தக் கூட்டத்தை மறுதேதிக்கு மாற்றி வைக்கச் சொன்னார். பொதுக்குழுக் கூட்டத்தின் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும். சக உறுப்பினர்கள் பங்குபெறும் அந்தக் கூட்டத்தில் அனைத்து ஆவணங்களும் முன் வைக்கப்படும் " எனவும் கூறினார். 
2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த பொதுக்குழு கூட்டம் கூச்சல் குழப்பத்தால் பாதியிலேயே நிறுத்தப்பட்டு தேதி அறிவிக்காமல் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.   

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.