25 ஆண்டுகளில் தண்ணீர் இல்லாத நாடாக இங்கிலாந்து மாறும்!’ - அதிர்ச்சியளிக்கும் ஆய்வு!!


இங்கிலாந்து தண்ணீர்ப் பஞ்சம்
'அடுத்து வரும் 25 ஆண்டுகளுக்குள், இங்கிலாந்து மிகப்பெரிய தண்ணீர்ப் பற்றாக்குறையைச் சந்திக்கும்' என அந்த நாட்டின் சுற்றுச்சூழல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி எச்சரித்துள்ளார். சுற்றுச்சூழல் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் பெறப்பட்ட தரவுகளின்படி இந்த எச்சரிக்கை தரப்பட்டுள்ளது. உயர்ந்துகொண்டிருக்கும் இங்கிலாந்தின் மக்கள்தொகைக்கு ஏற்ப தண்ணீர்த் தேவையைப் பூர்த்திசெய்ய முடியாது. காலநிலை மாற்றத்தின் விளைவாக தண்ணீர்ப் பற்றாக்குறை அதிகரித்துவருகிறது. இன்னும் 25 ஆண்டுகளில் இந்த நிலைமை மோசமாகிவிடும். நாம், மாற்று நடவடிக்கைகளை எடுக்கவில்லையெனில், தேவையான தண்ணீரை வழங்க முடியாது.
"சிகரெட் புகையைக் குழந்தையின் முகத்தில் ஊதுவதை எப்படி இந்தச் சமூகமே ஏற்காதோ, அதைப் போல தண்ணீரை வீணாக்குவதையும் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளாத செயலாக மாற்ற வேண்டும்" என்கிறார் சுற்றுச்சூழல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான சர் ஜேம்ஸ் பெவன் (Sir James Bevan). மேலும் அவர் கூறுகையில், 2040-ம் ஆண்டுவாக்கில் நம்முடைய பெரும்பாலான கோடைக்காலங்கள் 2003 -ம் ஆண்டின் வெப்ப அலைகளைவிட மிகவும் வெப்பமாக இருக்கும். அத்தகைய கோடைக்காலங்களில் பல நதிகள் 50% - 80% அளவிற்குத் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படும் எனவும் எச்சரிக்கிறார். 
இங்கிலாந்தில், தனிநபர் ஒருவர் ஒரு நாளுக்கு 140 லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்துகிறார். இதை முறைப்படுத்துவதன்மூலம் 100 லிட்டராகக் குறைக்க முடியும். மேலும், இங்கிலாந்தில் மூன்றில் ஒரு பங்கு நீர் வீணாகும் நீர் அல்லது கசியக்கூடிய நீராக உள்ளது. இதைச் சரிசெய்தாலே, மக்களுக்கான தண்ணீர்த் தேவையைப் பூர்த்திசெய்ய முடியும். இவற்றைவிட முக்கியமான நீர் ஆதாரங்கள் மிகப்பெரிய நீர்த்தேக்கங்கள்தான். ஆனால், கடந்த 10 வருடங்களில் இங்கிலாந்தில் புதிய நீர்த்தேக்கங்கள் கட்டப்படவில்லை. மேலும், தண்ணீரைக் கொண்டுசெல்லும் குழாய்களிலிருந்தும் நீர் எடுக்கும் நீர் நிறுவனங்களில் இருந்து தண்ணீர் கசிவதும் இதற்குக் காரணமாகிறது. இவற்றை எல்லாம் சரிசெய்யும் முயற்சியையும் அரசு மேற்கொள்ள வேண்டும்.
உலகம் முழுக்க நிலத்தடி நீர் குறைவதும் தண்ணீர்ப் பற்றாக்குறை நிகழ்வதும், சமீப காலங்களில் அதிகரித்துவருகிறது. இதற்கு, மோசமான செயல்முறையும் தவறான கொள்கை முடிவுகளுமே காரணம் என்கின்றனர். மேலும், தண்ணீரைத் தக்கவைப்பதற்காகவும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காகவும் செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால், 25 ஆண்டுகளில் இங்கிலாந்தும் டே ஜீரோவை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். 
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.